News February 27, 2025
ஓயாத வன்முறை: கதறும் ராணுவ தளபதி

வங்கதேசம் மிகுந்த ஆபத்தில் இருப்பதாக கவலை தெரிவித்திருக்கிறார் ராணுவ தளபதி ஜெனரல் வக்கார் உஸ் ஜமான். மாணவர்கள் நடத்திய கிளர்ச்சியால், ஷேக் ஹஸீனாவின் ஆட்சி கடந்த ஆண்டு கவிழ்ந்த நிலையில், உயிருக்கு பயந்து இந்தியாவில் தஞ்சமடைந்தார். ஆனாலும், வங்கதேசத்தில் வன்முறை இன்னும் ஓயவில்லை. நிலைமை மோசமடைந்திருப்பதால் மக்கள் ஒழுக்கமுடனும் ஒற்றுமையுடனும் இருக்குமாறு ராணுவ தளபதி வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News February 27, 2025
இது தான் தன்னம்பிக்கையின் பலம்.. பெண் செய்த சாதனை

தென்கொரியாவின் ஜாங் இக் சன்னுக்கு 5 வயதில் ஆரம்பித்தது தசைநார் சிதைவு நோய். ஒவ்வொரு உறுப்புகளாக நோய் செயலிழக்க வைத்தது. ஆனாலும் படிக்க வேண்டும் என்ற அவரது ஆர்வத்தை மட்டும் நோயால் முடக்க முடியவில்லை. கண் அசைவு, பேச்சை வைத்து தேர்வெழுதி 37 வயதில் PG பட்டமே பெற்றுவிட்டார். முயற்சிக்கு பலன் நிச்சயம் என்பதற்கு ஜாங் உதாரணமாகி இருக்கிறார். எந்த பிரச்னை வந்தாலும் கலங்காதீங்க. NEVER EVER GIVEUP.
News February 27, 2025
கிராமத்து இயக்குநருடன் கைகோர்த்த SaNa

‘வம்சம்’, ‘நம்ம வீட்டு பிள்ளை’ படங்களை இயக்கிய பாண்டியராஜ், தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாண்டியராஜ் பெரும்பாலும் யுவன் சங்கர் ராஜா, டி.இமான் ஆகிய இசையமைப்பாளர்களுடனே பணியாற்றி வந்த நிலையில், தற்போது முதல்முறையாக சந்தோஷ் நாராயணனுடன் கைகோர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
News February 27, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹320 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.27) சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹8,010க்கும், சவரன் ₹64,080க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹106க்கும், 1 கிலோ ₹1,06,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் நேற்று சவரனுக்கு ₹200 குறைந்திருந்த நிலையில், 2வது நாளாக சரிவடைந்திருப்பது நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?