News January 14, 2025
72 நாள்களுக்கு அன்லிமிடெட் டேட்டா… JIO அசத்தல்

ரூ.749 கட்டணத்தில் ப்ரீபெய்ட் கட்டணத்தை ஜியோ, பண்டிகை கால சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கட்டணத்தில் ரீசார்ஜ் செய்தால், 72 நாள்களுக்கு தினமும் அதிவேக 2 ஜிபி 4ஜி டேட்டாவுடன் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். கூடுதலாக 20 ஜிபி டேட்டாவும் அளிக்கப்படும். இது தவிர, அன்லிமிடெட் அழைப்பு, ஜியோ சினிமா ஓடிடி, தினமும் 100 எஸ்எம்எஸ் சேவை வசதிகளும் வழங்கப்படும்.
Similar News
News November 14, 2025
BREAKING: சற்றுநேரத்தில் நாடே எதிர்பார்க்கும் தீர்ப்பு

பிஹார் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு (மக்களின் தீர்ப்பு) தொடங்குகிறது. கருத்துக்கணிப்புகள் NDA-க்கு சாதகமாக வந்திருக்கிறது. ஆனால், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி தங்கள் கூட்டணியே வெற்றிபெறும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி கூறியிருக்கிறார். வெற்றிப்பெறபோவது யார் என்று ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
News November 14, 2025
பெண்களுக்கு சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறை

கர்நாடகாவில் அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு 1 நாள் சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 18 – 52 வயதுள்ள பெண் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 12 நாள்கள் விடுமுறை கிடைக்கும். ஒருவேளை குறிப்பிட்ட மாதத்தில் விடுமுறையை எடுக்காவிட்டால், அதை சேர்த்து வைத்து அடுத்த மாதம் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் இச்சட்டம் வந்தால் எப்படி இருக்கும்?
News November 14, 2025
காலை வெறும் வயிற்றில் இத குடிங்க..

காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அத்துடன், செரிமான மேம்பாடு, முடி வளர்ச்சி, உடல் எடையை குறைக்க, சருமத்தை ஆரோக்கியமாக வைக்க, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கவும் இது உதவுகிறது. இந்த சாறில் சர்க்கரை கலந்து குடிக்க வேண்டாம். அனைவருக்கும் பயனளிக்கட்டுமே, SHARE THIS.


