News August 20, 2024
மலேசிய பல்கலை.,யில் திருவள்ளுவர் இருக்கை: மோடி

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலை.,யில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்படும் என PM மோடி தெரிவித்துள்ளார். மலேசிய PM அன்வர் இப்ராஹிம் இந்தியா வந்துள்ள நிலையில், இந்திய தொழிலாளர்கள் மலேசியா செல்வதை எளிதாக்குவது, திருவள்ளுவர் இருக்கை அமைப்பது உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மலேசிய பிரதமரின் வருகை அடுத்த 10 ஆண்டுகளுக்கு இரு நாடுகளின் உறவை மேம்படுத்தும்என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
Similar News
News January 24, 2026
மதுரைக்கு மாவட்டத்தில் புதிதாக மேம்பாலங்கள்?

தற்போது நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, கேள்வி நேரத்தில் மதுரைக்கு தெப்பக்குளம், விரகனூர் மற்றும் மாட்டுத்தாவணி ஆகிய பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் எ.வ.வேலு மேற்குறிப்பிட்ட பகுதிகளில் பாலம் அமைக்க ஆய்வு பணிகள் முடிந்து அடுத்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். (இது குறித்து உங்கள் கருத்து)
News January 24, 2026
பாகிஸ்தான் பனிச்சரிவில் ஒரு குடும்பமே அழிந்தது

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவில் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கைபர் பக்துன்வா பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பச்சா கான், அவரது மனைவி, 3 மகன்கள், 2 மகள்கள் & 2 மருமகள்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் சுவாச பிரச்னைகளால் அவதிப்படுவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
News January 24, 2026
தமிழில் தெரியாத ஒரே வார்த்தை ’பயம்’: சீமான்

வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுபவன்தான் வீரன் என சீமான் கூறியுள்ளார். வெற்றியடைந்தால் இருப்பேன் தோல்வியடைந்தால் சென்றுவிடுவேன் என்பவன் கோழை என்று பேசிய அவர், தங்களுக்கு தெரியாத மூன்றெழுத்து ’பயம்’ என பேசியுள்ளார். மேலும், தங்கள் பரம்பரைக்கே தெரிந்த மூன்றெழுத்து ’வீரம்’ எனவும் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க..


