News February 27, 2025
உக்ரைன் அதிபர் USA பயணம்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாளை USA வர உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைனின் அரிய கனிம வளங்களை USAவிற்கு வழங்கவும், அதற்கு பதிலாக பாதுகாப்பு, நிதி பெற்றுக் கொள்வது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. டிரம்ப் பதவியேற்றதும், USAவின் நிலைப்பாடு ரஷ்யாவுக்கு ஆதரவாக மாறி வருவதைத் தொடர்ந்து நடைபெறும் சந்திப்பு என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Similar News
News February 27, 2025
தங்கம் விலை சவரனுக்கு ₹320 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.27) சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹8,010க்கும், சவரன் ₹64,080க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹106க்கும், 1 கிலோ ₹1,06,000க்கும் விற்பனையாகிறது. தங்கம் நேற்று சவரனுக்கு ₹200 குறைந்திருந்த நிலையில், 2வது நாளாக சரிவடைந்திருப்பது நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
News February 27, 2025
தமிழகத்தில் எண்ணெய்: மத்திய அரசின் அடுத்த திட்டம்

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிக்கு மத்திய அரசு டெண்டர் விடுத்துள்ளது. இதனால் கடல் பகுதியில் மீன்வளம் பாதிக்கப்படும் என சமூக செயல்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு என்றாலே பிரச்னையை உருவாக்க மத்திய அரசு திட்டம் போடுகிறதா? இல்லை அதன் திட்டங்கள் பிரச்னையை உருவாக்குகிறதா? உங்கள் கருத்து என்ன?
News February 27, 2025
PAK வீரரின் கேவலமான செயல்: யுவராஜ் சிங் தந்தை சாடல்

PAK பவுலர் ஷகீன் அஃப்ரிடி கேவலமாக நடந்து கொண்டதாக யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் சாடியுள்ளார். CTயில் IND vs PAK போட்டியின் போது, 41ஆவது ஓவர் முடிவில் IND வெல்ல 17 ரன்களும், கோலி சதமடிக்க 13 ரன்களும் தேவைப்பட்டது. 42ஆவது ஓவரை வீச வந்த அஃப்ரிடி, கோலி சதமடிக்க கூடாது என்பதற்காக அந்த ஓவரில் 3 Wideகளை வீசியதாகவும், இது அவரது கேவலமான மனநிலையைக் காட்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.