News August 4, 2024
ஆசிரியர்களுக்கு உதயநிதி வேண்டுகோள்

விளையாட்டு வகுப்பை (PET Period) கடன் வாங்கி வேறு வகுப்புகளை நடத்த வேண்டாம் என, அனைத்துப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு கல்வி எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு முக்கிய எனக் குறிப்பிட்டுள்ள அவர், அறிவியல், கணக்கு ஆசிரியர்கள் விளையாட்டு வகுப்பை கடன் வாங்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News January 24, 2026
கள்ளக்குறிச்சி: கிராம சபை கூட்டம் ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜனவரி 26-ஆம் தேதி அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதித்தல்,கிராம ஊராட்சிகளின் தணிக்கை அறிக்கை,டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் பிரசாந்த் அறிவுறுத்தியுள்ளார்
News January 24, 2026
பண மழை கொட்டும் 3 ராசிகள்

கேது பகவான் நாளை(ஜன.25) பூரம் நட்சத்திரத்தின் 2-வது பாதத்தில் இருந்து முதல் பாதத்திற்கு பெயர்ச்சி அடைவதால் 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி, *மேஷம்: வருமானம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்க வாய்ப்புள்ளது. *கன்னி: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் அகலும். நிதி நிலைமை மேம்படும். *தனுசு: சேமிப்பு உயரக் கூடும். வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
News January 24, 2026
விஜய்க்கு வாழ்த்து சொன்ன சீமான்

விஜய்க்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதால், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையில் தவெக மும்முரமாக உள்ளது. இந்நிலையில் விசில் சின்னம் வழங்கப்பட்டதற்கு விஜய்க்கு தனது வாழ்த்துகளை சீமான் தெரிவித்துள்ளார். அதேசமயம் தான் கேட்கும் சின்னம் கிடைக்காது, கிடைத்தாலும் மாற்றிவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 2024 தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டதால் சீமான் மைக் சின்னத்தில் நின்றார்.


