News August 6, 2024

உதயநிதிக்கு தற்போது துணை முதல்வர் பதவி இல்லை?

image

உதயநிதிக்கு இம்மாதம் துணை முதல்வர் பதவி அளிக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் அதை சூசகமாக மறுத்துவிட்டார். இதை சுட்டிக்காட்டும் திமுக வட்டாரங்கள், தற்போதைக்கு உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படாது. 2026 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. எனவே துணை முதல்வர் பதவி குறித்த செய்தியை நம்ப வேண்டாமெனவும் கூறுகின்றன.

Similar News

News January 21, 2026

NDA கூட்டணியில் மீண்டும் OPS?

image

மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கத்தை தொடர்ந்து <<18915214>>ஓபிஎஸ்ஸும் <<>>திமுகவில் இணையலாம் என பேசப்பட்டது. இந்நிலையில் NDA கூட்டணியில் OPS மீண்டும் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடப்பதாகவும், அவருக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. OPS மகனுக்கு ஒரு தொகுதியும், அவரது ஆதரவாளரான உசிலம்பட்டி MLA அய்யப்பனுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

News January 21, 2026

BREAKING: வரலாறு காணாத சரிவு.. பெரியளவில் தாக்கம்

image

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 60 காசுகள் சரிந்துள்ளது. இதன்மூலம், வரலாறு காணாத அளவிற்கு ஒரு டாலர் ₹91.74 ஆக உயர்ந்துள்ளது. டாலருக்கான வலுவான தேவை, உலக அரசியலில் நிலவும் நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட பல காரணங்களால், இத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 2025-ல் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 4.95% சரிந்தது குறிப்பிடத்தக்கது.

News January 21, 2026

கோலியை முந்திய நியூசிலாந்து வீரர்!

image

ஐசிசி ODI பேட்ஸ்மேன் ரேங்கிங்கில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான ODI தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் என 352 ரன்கள் குவித்ததன் மூலம் அவர், 61 புள்ளிகள் ஏற்றம் கண்டு 845 புள்ளிகளுடன் உள்ளார். 795 புள்ளிகளுடன் கோலி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். NZ தொடரில் 61 ரன்கள் மட்டுமே எடுத்த ரோஹித் 4-வது இடத்திற்கு சறுக்கியுள்ளார்.

error: Content is protected !!