News August 5, 2024
கமலா ஹாரிஸுடனான விவாதத்தை தவிர்க்கும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் முன்னிட்டு ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுடன் நடைபெறவிருந்த நேரடி விவாதத்தை குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் ரத்து செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X பதிவில், “செப்., 10ஆம் தேதி தனியார் செய்தி நிறுவனம் சார்பில் நடத்தப்படும் விவாதத்தில் நான் கலந்துகொள்ள போவதில்லை. அதற்கு முன்னதாக செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ள விவாதத்தில் கலந்து கொள்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 13, 2026
ஸ்டிரைக் அறிவிப்பு.. தமிழக அரசுக்கு புதிய நெருக்கடி

தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஊராட்சி செயலாளர்களை தொடர்ந்து, தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க சத்துணவு ஊழியர்களும் தயாராகி வருகின்றனர். சிறப்பு காலமுறை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8-ம் தேதி அடையாள போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்தவுடனே ஜன.20-ம் தேதி முதல், வேலை நிறுத்தம் செய்யப்போவதாக சத்துணவு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
News January 13, 2026
₹72 கோடி கொடுப்பதால் ‘கைதி 2’-ஐ ஓரங்கட்டினாரா லோகேஷ்?

சூர்யாவுக்கு சொன்ன ‘இரும்புக்கை மாயாவி’ கதையை அல்லு அர்ஜுனுக்கு சொல்லி லோகேஷ் ஓகே வாங்கியதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், அப்படத்தில் அவருக்கு ₹72 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஒரு மாதத்திற்குள் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுவதால் தான் ‘கைதி 2’ படத்தை அவர் ஓரங்கட்டியதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
News January 13, 2026
அதிமுக வேட்பாளர் தேர்வில் இபிஎஸ் போடும் பிளான்!

அதிமுகவில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் EPS விறுவிறுப்பாக நேர்காணல் நடத்தி வருகிறார். அதில், தொகுதியில் உள்ள செல்வாக்கு, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா, கடந்த காலங்களில் கட்சிக்காக ஆற்றிய பணி உள்ளிட்டவைகள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறாராம். குறிப்பாக, திமுகவின் விமர்சனத்திற்கு ஆளாகாத வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளாராம்.


