News August 20, 2024
நாளை கடைசி: அரசு வங்கிகளில் வேலை

அரசு வங்கிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் IBPS அமைப்பு, சமீபத்தில் 896 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கு, பி.இ, பி.டெக்., எல்.எல்.பி., எம்பிஏ படித்தவர்கள் https://www.ibps.in/index.php/specialist-officers/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நாளையுடன் (ஆக.21) முடிவடைகிறது. வேலை தேடும் நபர்களுக்கு இதை பகிர்ந்து உதவுங்கள்.
Similar News
News January 21, 2026
மயிலாடுதுறை: இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இருவர் மட்டுமே செல்ல வேண்டும், அப்படி செல்லும் இருவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும், மேலும் சாலை விதிகளை சரியாக முறையில் பயன்படுத்தி சாலை விபத்துகளை தவிர்க்க வேண்டும் என பொதுநலன் கருதி தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 21, 2026
BREAKING: திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?

OPS ஆதரவாளர்களாக இருந்த வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில், OPS விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அதனால், விரைவில் OPS-ம் திமுகவில் இணையவிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
News January 21, 2026
தவெக தனித்துப் போட்டியா?

விஜய்க்கு ஆதரவாகவே பேசிவந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தவெகவுடன் கூட்டணி அமைப்பார் என பேசப்பட்டது. ஆனால், தற்போது திடீர் திருப்பமாக NDA கூட்டணியில் அவர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜன.23-ல் PM மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் கிருஷ்ணசாமியும் மேடையேறுவார் என்றும் கூறப்படுகிறது. அமமுகவும் NDA கூட்டணியில் இணைந்துவிட்டதால் விஜய் தனித்தே களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


