News October 9, 2025
இன்று ஒரே நாளில் ₹1,000 விலை மாறியது

<<17954827>>தங்கத்துடன்<<>> போட்டிப் போட்டுக்கொண்டு வெள்ளி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில், இன்று(அக.9) வெள்ளி கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹171-க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ₹1 கிலோவுக்கு ₹1,000 அதிகரித்து ₹1,71,000 ஆக விற்பனையாகிறது. தங்கத்தை போல வெள்ளியிலும் முதலீடுகள் அதிகரிப்பதால் விலை அதிகரித்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
Similar News
News November 9, 2025
உனக்கென நான், எனக்கென நீ!

இந்த கணவருக்கு கண் பார்வை இல்லை. மனைவிக்கு காலில் பிரச்னை. ஆனால், கடவுளிடம் குறை கூறி கொண்டிருக்காமல், வாழ்க்கையை தாங்களே அழகாக்கி கொண்டுள்ளனர். பார்வையற்ற கணவனுக்கு இந்த மனைவி வழிதுணையாக இருக்க, அவள் காட்டிய பாதையில் தனது குழந்தையை சுமந்து செல்கிறார் இந்த கணவர். வாழ்க்கை துணை, வழி துணையாக மாறிய தருணம் அவர்களின் வாழ்க்கையை அழகாக்கியது மட்டுமின்றி, மற்ற தம்பதிகளுக்கு பாடமாகவும் அமைந்துவிட்டது.
News November 9, 2025
SIR-ல் ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகக்கூடாது: CM ஸ்டாலின்

SIR பணிகளால் தகுதியான ஒரு ஓட்டு கூட மிஸ் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு CM ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காணொலி வாயிலாக பேசிய அவர், ED, CBI உள்ளிட்டோரும் நமக்கு எதிராக தயாராகி கொண்டிருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என நினைப்போரது சூழ்ச்சிகளை தகர்க்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.
News November 9, 2025
உங்க கையிலும் பணம் அதிகமாக புழங்கணுமா?

பணக்காரராக ஆக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. அக்கனவை நினைவாக்க, இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க ✱சம்பளம் அதிகரித்தால், உடனே செலவை அதிகரித்துவிட வேண்டாம் ✱தினமும் என்ன செலவு செய்கிறோம் என்பதை ஒருவாரத்திற்கு குறிப்பு எடுங்கள். இது தேவையற்ற செலவுகளை கழிக்க உதவும் ✱சிறிய தொகை என்றாலும் சேமியுங்கள் ✱ஆன்லைனில் தள்ளுபடியில் கிடைக்கிறது என தேவையற்ற பொருள்களை வாங்கி குவிக்க வேண்டாம். SHARE IT


