News November 30, 2024

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

image

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் கடலூரில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்

Similar News

News November 7, 2025

கடலூரில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்

image

கடலூரில் நவம்பர் மாதத்திற்கான பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நாளை (8.11.2025) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கடலூர் பீச்ரோட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் நடத்தப்படும். இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளார் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News November 7, 2025

கடலூர்: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

image

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கு முடங்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT

News November 7, 2025

கடலூர்: திருமணத்திற்கு 1 பவுன் தங்கம், ரூ.25,000!

image

1. கடலூர் மாவட்ட மக்களே, ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000 பணம் & 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.
2. இதற்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அணுக வேண்டும்.
3. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
4. திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
5. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!