News April 22, 2025
TNPSC G-1 & TNUSRB-SI தேர்விற்கான இலவச பயிற்சி

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் டி.என்.பி.எஸ்சி குரூப் -1மற்றும் TNUSRB_SI தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு 23.4.2025 புதன் முதல் தினசரி பிற்பகல் மூன்று மணி முதல் 6:00 மணி வரை வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடத்திட்ட வாரியாக வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
நாகையில் மீன்பிடி துறைமுகம் அடிக்கல் நாட்டு விழா

நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி மக்கன் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில் ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் துறைமுகம் அமைக்கும்பணியை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட
செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
News November 12, 2025
பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த எஸ்பி

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், எஸ்பி செல்வகுமார் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து, 9 மனுக்களை பெற்றார். மேலும் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மனுதாரர்களுக்கு உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
News November 12, 2025
நாகை: CM ஸ்டாலினை விமர்சித்தவருக்கு சிறை

தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை தவறாக விமர்சித்து, வாட்சப் மற்றும் முகநூலில் புரட்சித்தமிழர் மக்கள் கழக நிறுவனத் தலைவர் ஆனந்தராஜ் என்பவர் பதிவிட்டுள்ளார். அவர் மீது, திமுக நிர்வாகி கொடுத்த புகாரில் கீழையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, ஆனந்தராஜை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள்ளார்.


