News November 14, 2025

TN-ல் டெலிவரி வேலை செய்யும் இளம் டாக்டர்கள்

image

`உனக்கு என்னப்பா டாக்டரா இருக்க, நல்லா சம்பாதிப்ப’ என இனி சொல்லாதீர்கள். ஏனென்றால் TN-ல் இளம் டாக்டர்களின் நிலை மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இளம் டாக்டர்களுக்கு ₹15,000 தான் சம்பளமாக கிடைப்பதாகவும், ₹30,000-ஐ எட்டுவதற்குள் 30 வயது ஆகிவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், கேப்/பைக் டிரைவர், டெலிவரி மேன் வேலைகளுக்கும் MBBS படித்த இளம் டாக்டர்கள் செல்லும் நிலை உள்ளதாம்.

Similar News

News December 10, 2025

EPS உடன் செங்கோட்டையன்… கடைசி PHOTO

image

அதிமுகவின் முதல் பொதுக்குழுவை நடத்தி, எம்ஜிஆரிடம் பாராட்டை பெற்றவர் செங்கோட்டையன். 50 ஆண்டுகால அரசியலில் அவர் இல்லாமல் ஒரு அதிமுக பொதுக்குழு கூட இதுவரை நடந்ததே இல்லை. தற்போது கட்சி மாறிவிட்டதால், இன்று நடக்கும் பொதுக்குழுதான் அவர் இல்லாமல் நடக்கும் முதல் பொதுக்குழுக் கூட்டம். இந்நிலையில், EPS உடன் அவர் (KAS) கடைசியாக பங்கேற்ற பொதுக்குழுவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

News December 10, 2025

அதிமுக உடன் கூட்டணி இல்லையா?

image

ADMK பொதுக்குழுவில் துரோகிகளால் ஆட்சியை இழந்ததாக OPS உள்ளிட்டோரை மறைமுகமாக குறிப்பிட்டு சி.வி.சண்முகம் பேசியதை கைதட்டி EPS வரவேற்றார். இதன் மூலம் இருவரையும் கூட்டணியில் இணைக்க அவர் விரும்பவில்லை என்பது தெரிகிறது. அதேநேரம் இருவரையும் கூட்டணியில் மீண்டும் இணைக்க, டெல்லியில் அண்ணாமலை முகாமிட்டுள்ளார். இதனால், இருவரும் கூட்டணியில் இணைவார்களா, இணையமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News December 10, 2025

SIR படிவம் சமர்ப்பிக்க நாளையே கடைசி!

image

SIR படிவத்தை சமர்பிக்க நாளை, டிசம்பர் 11-ம் தேதியே கடைசி நாள். உடனே உங்கள் பகுதியின் BLO-வை அணுகி, படிவத்தை பூர்த்தி செய்து அவரிடம் சமர்ப்பியுங்கள். தமிழ்நாட்டில் இதுவரை 6.36 கோடி வாக்காளர்களின் பதிவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. உங்கள் படிவம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதா என அறிய <>இங்கே <<>>கிளிக் செய்யவும். SIR பணிகளை தொடர்ந்து, 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

error: Content is protected !!