News January 12, 2025

திருப்பதி கூட்ட நெரிசல்: இன்று ₹25 லட்சம்

image

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தேவஸ்தானம் சார்பில் இன்று ₹25 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட உள்ளது. இதற்காக தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு தலைமையிலான குழுவினர் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் வசிக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க உள்ளனர். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு இலவச படிப்பு வழங்குவதற்கான தகவல்களையும் சேகரிக்க உள்ளனர்.

Similar News

News December 7, 2025

அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

image

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அரசுப் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் நடத்தப்படும் நிலையில், 3-ம் பருவ தேர்வுகள் டிச.16-ல் தொடங்கி டிச.23 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, டிச.24 முதல் ஜன.1 வரை பள்ளிகள் விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிச.24 முதல் ஜன.4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறையாகும்.

News December 7, 2025

திமுக சமாதானத்தை போற்றுகிறது: சேகர்பாபு

image

சனாதனத்தை தாங்கள் (திமுக) அழிக்க முயலவில்லை என்று சேகர்பாபு கூறியுள்ளார். வட மாநிலங்களில் வேண்டுமானால் பாஜக நினைத்த மாதிரியான காரியங்கள் நடக்கலாம், ஆனால் தமிழகத்தில் அது பகல் கனவாகவே இருக்கும் என்று குறிப்பிட்டார். சனாதனம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் அதை எதிர்ப்பதாக தெரிவித்த சேகர்பாபு, திமுக அரசு சமாதானத்தை போற்றுகின்ற அரசு என்றும் தெரிவித்தார்.

News December 7, 2025

CINEMA 360°: புது லுக்கில் கலக்கும் ஜி.வி.பிரகாஷ்

image

*புதுமுகங்கள் நடித்துள்ள ‘மாயபிம்பம்’ படத்தின் எனக்குள்ளே என்ற பாடலை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். *சிரஞ்சீவி, நயன்தாரா நடிக்கும் ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படத்தின் 2-வது பாடல் வெளியாகியுள்ளது. *ஜி.வி.பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார். *ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ‘தி பாய்ஸ்’ வெப் சீரிஸின் 5-வது பாகத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

error: Content is protected !!