News October 19, 2025
இனி Whatsapp-ல் இந்த தொல்லை இல்ல; புது அப்டேட்!

Whatsapp-ல் நிறைய Ad மெசேஜஸ் வருதா? இந்த தொல்லையை தீர்க்கும் நோக்கில் Whatsapp தற்போது புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறதாம். இதில், நீங்கள் ரிப்ளை செய்யாமல் வைத்திருக்கும் நபர் (அ) நிறுவனங்களை Whatsapp நிறுவனம் கண்காணிக்கும். பிறகு, உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியாமல் அவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும். கூடிய விரைவில் இந்த அப்டேட் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. SHARE.
Similar News
News December 6, 2025
இன்று ரேஸில் வெல்வாரா அஜித்குமார்?

மலேசியாவில் இன்று நடைபெறும் Michelin 12H கார் ரேஸிங்கில் அஜித்குமார் களமிறங்கவுள்ளார். இந்த ஆண்டில் ரேஸிங்கிலேயே முழுக்கவனமும் செலுத்தி வரும் அஜித், சில போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில், இன்றைய போட்டியிலும் அஜித் வெற்றி பெற வேண்டும் என நெட்டிசன்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். இதனிடையே, ரேஸ் களத்தில் அஜித்தின் போட்டோஸ் வெளியாகி வைரலாகிறது.
News December 6, 2025
ஜீரண சக்தியை அதிகரிக்கும் மூலிகை தேநீர்!

உடலின் ரத்த ஓட்டத்தைத் துரிதப்படுத்தவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும் சீமை சாமந்தி தேநீர் உதவும். ➤சாமந்திப்பூ இதழ்களை பிரித்து நன்கு காய வைக்கவும். ➤1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 1 தேக்கரண்டி உலர்ந்த பூக்களை போடவும். ➤8- 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். ➤அதை அடுப்பிலிருந்து இறக்கி, அதில் கொஞ்சம் தேன் கலந்து கொண்டால், சத்தான சீமை சாமந்தி தேநீர் ரெடி. SHARE THIS.
News December 6, 2025
சற்றுமுன்: மழை வெளுத்து வாங்கும்

டிட்வா புயல் எதிரொலியால், தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கனமழை வெளுத்து வாங்கியது. பின், புயல் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்ததால், நேற்று சற்று மழை குறைந்தது. இந்நிலையில், கோவை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தேனி, நீலகிரி, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ( காலை 10 மணி வரை) மழை பெய்யக்கூடும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது.


