News January 14, 2025
இதுதான் உண்மையான சுதந்திர தினம்: RSS தலைவர்

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட அன்று தான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். அந்த நாளை ‘பிரதிஷ்டா துவாதசி’ என மக்கள் கொண்டாட வேண்டும் எனவும், ராமர் கோயில் இயக்கம் யாரையும் எதிர்ப்பதற்காக ஆரம்பிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், RSS இயக்கம், பாரதத்தின் சுய விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 15, 2025
தவெக தொண்டர்களுக்கு N.ஆனந்த் அழைப்பு

SIR-க்கு எதிராக தவெக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என N.ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார். SIR பணிகளால் வாக்காளர்கள் பெரும் குழப்பத்திலும், வாக்குரிமை பறிபோகுமோ என்ற அச்சத்திலும் இருப்பதாகவும் X-ல் அவர் பதிவிட்டுள்ளார் . SIR-க்கு எதிராக நாளை காலை 11 மணி அளவில் தவெக மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 15, 2025
இறந்தவர்கள் மீண்டும் உயிருடன் வர முடியுமா?

மனிதனை ஆச்சரியப்படுத்தும் கண்டுபிடிப்புகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கிறது. அப்படி விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஒன்றுதான் cryopreservation. அதாவது, ஒரு சடலம் -196°C வெப்பநிலையில் திரவ நைட்ரஜனில் புதைக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது. ரத்தம் உறைதல், செல்களுக்கு சேதம் ஏற்படுவதைத் இது தடுக்கிறது. ஒருவேளை எதிர்காலத்தில் இறந்த ஒருவரை உயிர்ப்பிக்கும் தொழில்நுட்பம் வந்தால், இந்த உடல் பயன்படுத்தப்படும்.
News November 15, 2025
நாளை மறுநாள் அனைத்து பள்ளிகளுக்கும்…

அரசு பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு<<18287304>> இலவச சைக்கிள்<<>> வழங்கும் திட்டத்தை காரைக்குடியில் DCM உதயநிதி தொடங்கி வைத்துள்ளார். தொடர்ந்து, சென்னை பல்லாவரத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசனும் மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். நாளை விடுமுறை என்பதால், திங்கள்கிழமை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இலவச சைக்கிள் பெற யாரெல்லாம் வெய்ட்டிங்?


