News April 7, 2024
மோடிக்கு இது மக்களின் உத்தரவாதம்

காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாக அக்கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். பிரதமரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த அவர், காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதம் காலத்தின் தேவை. இது நாட்டில் துன்பப்படும் மக்களின் குரல் என்றார். ஜூன் 4ஆம் தேதிக்கு பின்னர் மோடி நீண்ட விடுப்பில் செல்வார். இது மக்களின் உத்தரவாதம் என தெரிவித்தார்.
Similar News
News December 12, 2025
இன்று முதல் 17 லட்சம் மகளிருக்கு மாதம் ₹1,000

தமிழகத்தில் தற்போது 1.14 கோடி மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தகுதி வாய்ந்த விடுபட்ட மகளிருக்கும் உரிமை தொகை வழங்கப்பட இருப்பதாக அரசு அறிவித்தது. அதன்படி, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் தேர்வு செய்யப்பட்ட 17 லட்சம் மகளிருக்கு மாதம் ₹1,000 வழங்கும் பணியை CM ஸ்டாலின் இன்று சென்னையில் துவக்கி வைக்கிறார்.
News December 12, 2025
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD அறிவித்துள்ளது. அதன்படி, தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் கூறியுள்ளது.
News December 12, 2025
ஏலக்காயின் நன்மைகள்

ஏலக்காய் வெறும் வாசனை மற்றும் சுவை தரும் மசாலா பொருள் மட்டுமல்ல, பல மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்று. இதனை, சூடான பால், தேநீர் ஆகியவற்றில் சேர்த்தோ அல்லது உணவுக்குப் பிறகு மென்றோ சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


