News January 20, 2025
இது வெறும் Dead Cat Bounceதான்!

தொடர் சரிவைக் கண்ட இந்திய பங்குச்சந்தை இன்றைய வர்த்தகத்தில் சற்று ஏற்றம் கண்டுள்ளது. நிஃப்டி 170 புள்ளிகள் உயர்ந்து 23,370 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால், இது வெறும் Dead Cat Bounce எனக் கூறும் நிபுணர்கள், சந்தை மேலும் சரியக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். எனவே, அதிகப்படியான பணத்தை முதலீடு செய்ய வேண்டாமெனவும் அறிவுறுத்துகின்றனர்.
Similar News
News May 8, 2025
கேது பெயர்ச்சி: பொற்காலம் தொடங்கும் 3 ராசிகள்

மே 18-ம் தேதி நடக்கவுள்ள கேது பெயர்ச்சியால் பின்வரும் 3 ராசிகள் அதிக நன்மைகள் அடைவர்: *சிம்மம்: தடைகள் நீங்கும். தொழில், வேலையில் உயர்வு, நிதிநிலை மேம்படும். பெண்களின் அந்தஸ்து உயரும். *விருச்சிகம்: புதிய முயற்சிகள் பலன் தரும், திருமண யோகம், குடும்ப வாழ்க்கை பலப்படும் *மகரம்: மன அழுத்தத்திலிருந்து விடுதலை. திருமண யோகம் உண்டு. காதல் வாழ்க்கை சிறக்கும். நிதிநிலை மேம்படும்.
News May 8, 2025
பஞ்சாப் அணி பேட்டிங்

இன்றைய ஆட்டத்தில் PBKS – DC அணிகள் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கினாலும், 20 ஓவர்கள் முழுமையாக வீசப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டி 8:30-க்கு தொடங்கும்
News May 8, 2025
27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. மிதமான மழை: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம். லேசான மழை: சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், கரூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர்.