News September 30, 2025
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது: விஜய்

தனது பரப்புரையின் போது மக்களுக்கு பாதுகாப்பான இடங்களையே தேர்வு செய்வதில் கவனமுடன் இருந்ததாக விஜய் தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களை எல்லாம் தவிர்த்துவிட்டு, மக்கள் பாதுகாப்பை மட்டுமே மனதில் கொண்டு பரப்புரைக்கு போலீஸிடம் அனுமதியும், பாதுகாப்பும் கேட்டோம் என்றார். எனினும், கரூரில் நடக்கக் கூடாத துயரம் நடந்துவிட்டதாக அவர் கவலையுடன் குறிப்பிட்டார்.
Similar News
News December 10, 2025
அதிமுக ஆட்சியில் பங்கு கிடையாது: தம்பிதுரை

2026 தேர்தலில் வெற்றிபெற்று EPS ஆட்சியமைப்பார்; அதிமுக ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது என்று அதிமுக MP தம்பிதுரை தெரிவித்துள்ளார். ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என விஜய் அறிவித்தபின் தமிழக அரசியல் களமே மாறியிருக்கிறது. குறிப்பாக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் ஆட்சியில் பங்கு என்று தொடர்ந்து பேசி வரும் நிலையில், தம்பிதுரை இவ்வாறு தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
வரும் 31-ம் தேதிக்குள் இதெல்லாம் செஞ்சிடுங்க!

இந்த விஷயங்களை டிசம்பர் 31-ம் தேதிக்குள் தவறாமல் முடித்து விடுங்கள். ✱பான் ஆதார் இணைப்பு ✱2024–25 நிதியாண்டுக்கான தாமதமான அல்லது திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் ✱மலிவு விலையில் வீடு கட்டி கொடுக்கும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவுக்கு விண்ணப்பித்து விடுங்கள் ✱இவற்றுடன் 2025–26 நிதியாண்டுக்கான 3-ம் தவணைக்கான Advance Tax செலுத்துவதற்கான கடைசி தேதி டிசம்பர் 15 ஆகும்.
News December 10, 2025
BREAKING: முடிவை அறிவித்தார் OPS

தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவோர் பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என எண்ணுவதாக OPS தெரிவித்துள்ளார். போடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒன்றிணைவது குறித்து பொதுக்குழு நடத்துவோர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறினார். EPS தலைமையில் சென்னையில் நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில் <<18520304>>நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களில்<<>> ஒன்றிணைப்பு தொடர்பான அறிவிப்புகள் ஏதும் இல்லை.


