News August 18, 2025

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை

image

இன்று (ஆக.18) வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் 1,084 புள்ளிகள் உயர்ந்து 81,681 புள்ளிகளிலும், நிஃப்டி 363 புள்ளிகள் அதிகரித்து 24,995 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. Maruti Suzuki, Hero Motorcop, PG Electorplast Ltd ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் உள்ள நிலையில், Hindustan Petroleum உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவில் உள்ளன.

Similar News

News December 16, 2025

சிவகங்கை: நாளை (டிச.17) மின்தடை பகுதிகள்

image

மானாமதுரை மற்றும் சாலைக்கிராமம் பகுதிகளில் நாளை (டிச.17) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின்தடை பகுதிகள்: மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், கட்டிக்குளம், மிளகனூா், முத்தனேந்தல், கீழப்பசலை, குறிச்சி, முனைவென்றி, நல்லாண்டிபுரம் வண்டல், சூராணம், முத்துராம லிங்கபுரம், வல்லைக்குளம், ராதப்புளி, வடக்கு சாலைகிராமம், கோட்டையூர், அதிகரை, அண்டக்குடி, சிறுபாலை. SHARE

News December 16, 2025

21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: IMD

image

தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இந்த மழை வரும் 21-ம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிப்பொழிவு இருக்கும் என்றும், இன்று வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருக்கும் எனவும் IMD கூறியுள்ளது.

News December 16, 2025

அதிமுகவில் இபிஎஸ்-க்கு இன்ப அதிர்ச்சி

image

அதிமுகவில், 349 மனுக்கள் EPS தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என வழங்கப்பட்டுள்ளது அவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். முதல் நாளில் மட்டும் 1,237 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது. அதிமுகவில் உள்கட்சி பூசல் நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், EPS-க்கான இந்த வரவேற்பு அரசியல் களத்தில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!