News August 6, 2024
திருமணத் தோஷம் போக்கும் ‘வெற்றிலை துடைப்பு’ சடங்கு

செவ்வாய் தோஷத்தால் திருமண தடைப்படுகிறது என கவலையில் மனம் வாடுவோர் குமரனை வணங்க குறைதீரும் என்பது ஆன்றோர் வாக்கு. கடலூர் வெற்றிவேலர் திருக்கோயிலுக்கு விரமிருந்துச் சென்று அங்கு நடக்கும் வெற்றிலை துடைப்பு சடங்கில் பங்கேற்று, தம் முகத்தை வெற்றிலைக் கொண்டு தீர்த்த நீரால் கழுவி, வள்ளி மணாளனுக்கு சிவப்பு மலரால் அர்ச்சித்து, நெய் விளக்கேற்றி வழிப்பட்டால் சிறந்த வாழ்க்கைத் துணை அமையும் என ஐதீகம்.
Similar News
News January 14, 2026
ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற அறிவுறுத்தல்

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களில், இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஈரானை விட்டு இந்தியர்கள் விரைவாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பாஸ்போர்ட், குடியேற்ற ஆவணங்களை தயாராக வைத்திருக்கவும், எந்தவித உதவியாக இருந்தாலும் உடனடியாக தூதரகத்தை அணுகுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. +989128109115, +98912810912 உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
News January 14, 2026
ஆசிரியர் தற்கொலை.. CM ஸ்டாலின் அதிர்ச்சி

பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன் நேற்று கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டார். அப்போது விஷம் அருந்தியதால் அவர் உடனடியாக ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சையில் இருந்த அவர் இன்று உயிரிழந்ததால், தற்கொலை வழக்காக பதிந்து போலீஸார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அரசுக்கு பின்னடைவாக மாறியுள்ளது.
News January 14, 2026
கிங் கோலி மீண்டும் நம்பர் 1

ஐசிசி ODI பேட்ஸ்மேன் தரவரிசையில், நீண்ட நாள்களுக்கு பிறகு நம்பர் 1 இடத்தை கிங் கோலி பிடித்துள்ளார். தனது கடைசி 5 ODI போட்டிகளில் 74, 135, 102, 65, 93 என மொத்தம் 469 ரன்கள் குவித்த அவர், 785 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்றொரு இந்திய வீரர் ரோஹித் சர்மா 2 இடங்கள் சறுக்கி 775 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். கேப்டன் கில் 725 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளார்.


