News July 10, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை ₹80 குறைவு

image

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹10 குறைந்து ₹6,760க்கும், சவரனுக்கு ₹54,080க்கும் விற்பனையாகிறது. அதேவேளை, வெள்ளி விலையில் எந்த மாற்றம் இல்லாமல், ஒருகிராம் வெள்ளி ₹99க்கு விற்பனையாகிறது.

Similar News

News July 9, 2025

பரந்தூர் விவகாரம்: நிலம் வழங்கியோருக்கு இழப்பீடு

image

பரந்தூர் விமான நிலையம் அமைக்க இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் 19 பேருக்கு இன்று இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் பரந்தூர், பொடவூர், நெல்வாய், வளத்தூர், அக்கம்மாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 19 பேர் நிலத்தை கொடுக்க ஒப்புக்கொண்டனர். அதன்படி 17 ஏக்கர் நிலம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

News July 9, 2025

13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

இன்று (ஜூலை 9) இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதாவது, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தி.மலை, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, நெல்லையில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது.

News July 9, 2025

கோயில் நிதியில் கல்லூரியா? இபிஎஸுக்கு சேகர்பாபு பதிலடி

image

அறியாமை இருளில் இபிஎஸ் மூழ்கியுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். கோயில் நிதியை எடுத்து கல்லூரிகள் கட்டப்படுவதாக கோவை பிரச்சாரத்தில் <<17000758>>இபிஎஸ் குற்றம்சாட்டியதற்கு<<>> சேகர்பாபு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று வரலாறு தெரியாமல் இபிஎஸ் பேசிவருவதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!