News October 11, 2025
குறும்பு வாத்தியாரின் கலக்கல் கிளிக்ஸ்

‘வா வாத்தியார்’ படம் வரும் டிச.5-ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அப்படத்தின் ஸ்பெஷல் போட்டோக்களை படக்குழு பகிர்ந்துள்ளது. பாடல், எமோஷனல் என முக்கிய காட்சிகளில் எடுக்கப்பட்ட அந்த போட்டோக்கள், படத்தின் Mode-ஐ வெளிப்படுத்துவதாக உள்ளது. கார்த்தியின் ஸ்பெஷல் போஸ்டரோ, புரமோவோ இல்லாமல் படத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு, இந்த போட்டோக்கள் சற்று ஆறுதலை தந்துள்ளன.
Similar News
News November 15, 2025
₹64.3 கோடியுடன் டாப்பில் உள்ள கொல்கத்தா

IPL அணிகள் தங்கள் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை இன்று மாலை வெளியிட்டது. இதில் KKR அணி 10 வீரர்கள் விடுவித்ததன் மூலம், அதிகபட்சமாக ₹64.3 கோடியை தன்வசம் வைத்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் CSK (₹43.4 கோடி), SRH (₹25.5 கோடி) LSG (₹22.9 கோடி), DC(₹21.8 கோடி), RCB (₹16.4 கோடி), RR (₹16.05 கோடி) , GT(12.9 கோடி), PBKS(₹11.5 கோடி), MI (₹2.75 கோடி) அகிய அணிகள் உள்ளன.
News November 15, 2025
பள்ளிகளுக்கு 12 நாள்கள் விடுமுறை… சூப்பர் அப்டேட்

நவம்பரில் அரசு விடுமுறையே இல்லாத நிலையில், அடுத்த மாதம் மொத்தமாக அரையாண்டு விடுமுறை வருவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. டிச.15 முதல் 23-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து, டிச.24 முதல் ஜன.4 வரை 12 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். தேர்வுக்கான அட்டவணையை விரைவில் பள்ளிக்கல்வித் துறை வெளியிட உள்ளது.
News November 15, 2025
ஆஸ்கர் போட்டியில் பா.ரஞ்சித்தின் ஆவணப்படம்

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ், யாழி பிலிம்ப்ஸ் தயாரிப்பில் மறைந்த முற்போக்கு பாடகரும், எழுத்தாளருமான தலித் சுப்பையாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு, ‘தலித் சுப்பையா-வாய்ஸ் ஆஃப் தி ரிபல்ஸ்’ என்ற ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. இயக்குநர் கிரிதரன் இதை இயக்கியிருந்தார். இந்நிலையில், இந்த ஆவணப்படம் ஆஸ்கருக்கான போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளதாக நீலம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.


