News June 17, 2024
நாடாளுமன்ற உறுப்பினரான யூடியூப் பிரபலம்

ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில், யூடியூப் பிரபலம் ஃப்டியாஸ் பனாயியோடோ சைப்ரஸ் குடியரசு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.பியாகியுள்ளார். 24 வயதான ஃப்டியாஸ், ப்ராங்க் வீடியோ மூலம் பிரபலமானவர். சவப்பெட்டியில் ஒரு வாரத்தை கழிப்பது, புல்லட் ரயிலில் டிக்கெட் இன்றி பயணிப்பது, நூறு பிரபலங்களைக் கட்டிப் பிடிப்பது போன்ற வீடியோக்களை வெளியிட்டுள்ளார். இவரை 20 லட்சம் பேர் யூடியூபில் பின் தொடர்கின்றனர்.
Similar News
News January 23, 2026
முதலமைச்சர் விளையாட்டு போட்டிகள் ஆட்சியர் அறிவிப்பு

முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டுப் போட்டிகள் 25-01-2026 அன்று நடைபெறவுள்ளது. இதில் ஊராட்சி ஒன்றிய அளவில் தடகளம், கபடி, கையுந்துபந்து, கேரம், கயிறு இழுத்தல் (ஆண்கள்/பெண்கள்), ஸ்ட்ரீட் கிரிக்கெட் -(ஆண்களுக்கு மட்டும்), எறிபந்து பெண்களுக்கு மட்டும்) மொத்தமாக 7 வகையான போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
News January 23, 2026
Cinema 360°: ‘புருஷன்’ படப்பிடிப்பு தொடக்கம்

*விஜய் சேதுபதியின் ‘காந்தி டாக்கீஸ்’ படத்தில் இருந்து ஏதோ பாடல் வெளியாகியுள்ளது. *விஷாலின் ‘புருஷன்’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. *’எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யா, பாண்டியராஜ் இணையவுள்ளதாக தகவல். *பிரபாஸின் ‘கல்கி 2’ படத்திற்கான இசையமைக்கும் பணிகளை தொடங்கிவிட்டதாக சந்தோஷ் நாராயணன் கூறியுள்ளார்.
News January 23, 2026
பள்ளி மாணவர்களே பரிசுகளை அள்ளுங்க.. சூப்பர் சான்ஸ்!

மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான கலைப் போட்டிகளை தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை 044 – 28192152 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம். என்ன மாணவர்களே, ரெடியா!


