News July 10, 2024
ரவுடிகள் பட்டியல் தயார்

நெல்லை மாவட்ட எஸ்.பி (பொறுப்பு) சுரேஷ்குமார் இன்று கூறுகையில், போலீசார் தயாரித்த பட்டியல்களில் நெல்லையில் 700 ரவுடிகளில் 600 பேர் சிறைகளிலும், நன்னடத்தை சான்றிதழ்களும் வழங்கியுள்ளனர். இதில் மீதமுள்ள 100 ரவுடிகளின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஒரு ரவுடிக்கு தலா ஒரு போலீசார் வீதம் 2 ஷிப்ட் வீதம் 2 போலீசார் நியமிக்கப்பட்டு மிக நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர் என்றார்.
Similar News
News July 8, 2025
வீரவநல்லூரில் இளம்பெண் வெட்டிக்கொலை

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே இளம்பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர கொலை தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தகாத உறவு காரணமாக இந்த படுகொலை நடந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
News July 8, 2025
நெல்லை மக்களின் மனதில் நீங்காத காந்திமதி

நெல்லையில் இன்று தேரோட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மகிழ்ச்சியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியில் திளைத்த போதிலும், அவர்களின் மனதில் நெருடலாக இருந்த பெயர் “காந்திமதி”. நெல்லை மக்கள் முதன்முறையாக காந்திமதி யானை இல்லாமல் இந்த தேரோட்டத்தினை நிகழ்த்தியுள்ளனர். நெல்லை மக்களின் நினைவில் இன்றும் காந்திமதி யானை உயிர்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது. *ஷேர்
News July 8, 2025
நெல்லை: பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு

நெல்லை: பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் (Local Bank Officer) பணிக்காக தமிழகத்திற்கு 60 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 24ம் தேதி கடைசி நாளாகும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். நெல்லையில் தேர்வு நடைபெறுகிறது. விண்ணப்பிக்க இங்கே <