News October 11, 2025
தவெகவினர் தன்னெழுச்சியாக வருகின்றனர்: செல்லூர் ராஜு

விஜய் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல EPS தயாராகிவிட்டதாக <<17974646>>TTV தினகரன்<<>> கூறியிருந்தார். EPS பரப்புரையில் தவெகவினர் தன்னெழுச்சியாகவே வருவதாக செல்லூர் ராஜு கூறியுள்ளார். மேலும் எந்த நேரத்திலும் தரம் தாழ்ந்து செல்ல வேண்டிய நிலை அதிமுகவுக்கு கிடையாது என்றும் கூறினார். பிள்ளையார்சுழி போட்டுவிட்டதாக EPS கூறிய நிலையில், செல்லூர் ராஜு இவ்வாறு தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
Similar News
News December 14, 2025
கர்நாடக காங்., பஞ்சாயத்துக்கு இன்றோடு முற்றுப்புள்ளியா?

கர்நாடகா CM பதவிக்கான பஞ்சாயத்தில் ஏற்கெனவே தங்களுக்குள் <<18420626>>எந்த பிரச்னையும் இல்லை<<>> என CM சித்தராமையா, DCM டிகே சிவகுமார் தெரிவித்தனர். இருப்பினும் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் எனவும் கூறியிருந்தனர். இந்நிலையில், இன்று டெல்லியில் சோனியா காந்தியை இருவரும் சந்திக்க உள்ளனர். இதன் மூலம் கர்நாடக காங்.,-ல் நிலவி வரும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 14, 2025
சற்றுமுன்: பிரபல வில்லன் நடிகர் காலமானார்

தி மாஸ்க், பல்ப் ஃபிக்சன் உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த ஹாலிவுட் நடிகர் பீட்டர் கிரீன்(60) மர்மமான முறையில் உயிரிழந்தார். நியூயார்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கிடந்த அவரது சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, பீட்டர் கிரீன் மறைவுக்கு ஹாலிவுட், பாலிவுட் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News December 14, 2025
மோடிக்கு தமிழ் மீது அக்கறை இல்லை: கார்த்தி சிதம்பரம்

ஒரு மாநிலத்தின் தேர்தல் இலக்கணம் மற்றொரு மாநிலத்துக்கு பொருந்தாது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தேர்தல் வரும்போது தமிழகத்திற்கு அடிக்கடி வரும் மோடி, அமித்ஷா தமிழ் உணவு, தமிழ் மொழிதான் பிடிக்கும் என்பார்கள். ஆனால் உண்மையில் புலம்பெயரும் பறவைகளைப் போல தேர்தலுக்காக வந்துவிட்டு செல்வார்களே தவிர, அவர்களுக்கு தமிழ், தமிழகத்தை பற்றி எந்த அக்கறையும் இருக்காது எனவும் விமர்சித்தார்.


