News August 18, 2025
கை மார்புக்கு வலு சேர்க்கும் சதுரங்க தண்டாசனம்!

✦கைகள், தோள்கள், மார்பு, மற்றும் வயிற்று தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.
➥தரையில் குப்புற படுத்து கொள்ளவும். பிறகு இடுப்பை மேலே உயர்த்தி, கைகளில் அழுத்தம் கொடுத்து, கால் & மார்பை தரையில் படும்படி கீழிறக்கவும்.
➥பிறகு, கால் தரையில் இருக்க, மேல் உடம்பை மட்டும் மேலே உயர்த்தவும். இந்த நிலையில் 15- 20 விநாடிகள் இருந்து விட்டு, பிறகு கால்களையும் உடலுக்கு நேராக இருக்கும் படி உயர்த்தவும்.
Similar News
News December 16, 2025
ரூ.1 லட்சம் பரிசு: கடலூர் கலெக்டர் அறிவிப்பு

தமிழக அரசு சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தும் தனி நபர் மற்றும் நிறுவனங்களுக்கு ‘பசுமை சாம்பியன்’ விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு பரிசுத்தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ள கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் வரும் ஜன.20-க்குள் https://www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News December 16, 2025
ஜனாதிபதி முர்மு நாளை தமிழகம் வருகை

வேலூரில் உள்ள பிரசித்திபெற்ற தங்க கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு நாளை தமிழகம் வருகிறார். ரேணிகுண்டாவில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூருக்கு வரும் முர்முவை, கவர்னர் ஆர்.என்.ரவி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்கின்றனர். இதையொட்டி வேலூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு அவர் ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார்.
News December 16, 2025
இன்று தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட்!

தளபதி கச்சேரி பாடலுக்கு பிறகு ‘ஜனநாயகன்’ அப்டேட் இன்றி விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். இந்நிலையில், அடுத்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 2-வது பாடல் ரிலீஸ் ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. 10 நாள்களில் இசை வெளியீடு விழா, டிரெய்லர் ரிலீஸ், படக்குழுவினரின் நேர்காணல் என அடுத்தடுத்து அப்டேட் வரவுள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளனர்.


