News October 20, 2025
ODI போட்டியில் நடந்த மிகப்பெரிய Error!

இந்தியாவுக்கு எதிரான முதல் ODI-யில் 176.5 Kph வேகத்தில் ஆஸி.,யின் மிட்சல் ஸ்டார்க் பந்து வீசியதாக கூறப்பட்டது. இதன்மூலம், அதிவேகமாக பந்துவீசிய சோயப் அக்தரின்(161.3Kph) சாதனையை முறியடித்தார் என பாராட்டப்பட்டார். ஆனால் உண்மையில் அவர் அவ்வளவு வேகமாக பந்து வீசவில்லையாம். இது தொழில்நுட்பக் கோளாறால் நடந்த தவறு எனவும் அவர் 140.8 kmph வேகத்தில்தான் பந்துவீசினார் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
நாமக்கல்: கள்ளக்காதலன் அடித்ததால் பெண் விபரீதம்!

நாமக்கல் அடுத்த எருமப்பட்டி பாலமுருகன் மனைவி ஜீவா (37) மற்றும் ஜெயக்குமார் (43) ஆகியோருக்கிடையே 8 ஆண்டுகளாக கள்ளத் தொடர்பு இருந்து, சத்யா நகரில் வீடு எடுத்து தங்கினர். நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டதால் ஜெயக்குமார் வீட்டை விட்டு வெளியேறி பின் வந்தபோது, ஜீவா சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்ததை கண்டார்.இந்த சம்பவம் அறிந்த நாமக்கல் போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
News December 5, 2025
Business 360°: டீசல் பயன்பாடு பன்மடங்கு அதிகரிப்பு

*கடந்த ஏப். முதல் அக். வரை ₹329 கோடிக்கு சீனாவுக்கு இந்தியாவில் இருந்து தேயிலை ஏற்றுமதியாகியுள்ளது *2025-26 நிதியாண்டின் இறுதியில் இந்தியாவின் GDP 7.4% ஆக உயரும் என அமெரிக்க நிறுவனம் கணிப்பு *கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு, நவம்பரில் 85.5 லட்சம் டன் டீசல் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது *இந்தியா-ரஷ்யா வர்த்தகத்தை சமநிலைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என பியூஸ் கோயல் உறுதி
News December 5, 2025
Sports 360°: டேக்வாண்டோவில் இந்தியாவுக்கு வெண்கலம்

*SUPER CUP கால்பந்து இறுதிப்போட்டிக்கு எப்.சி.கோவா, ஈஸ்ட் பெங்கால் எப்.சி அணிகள் முன்னேற்றம் * ILT20-ல் MI எமிரேட்ஸை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் வீழ்த்தியது *U-21 டேக்வாண்டோ உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிதேஷ் சிங் பிஸ்ட் வெண்கலம் வென்றார் *HCL ஸ்குவாஷ் தொடரின் ஃபைனலில் அனாஹத் சிங்-ஜோஷ்னா சின்னப்பா மோதல் *டி20 போட்டிகளில் சுனில் நரேன் 600-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்


