News March 22, 2024
2ஜி வழக்கு: கடந்து வந்த பாதை (2)

➤2008 அக் 20: டாடா போன்ற நிறுவனங்கள் தங்களுடைய பங்குகளை ஈடிசாலட், டோகோமோ போன்ற நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தன. ➤2009 நவ 20: ஒதுக்கீட்டில் கார்ப்பரேட்களின் தலையீடு இருந்ததை IT உறுதி செய்தது. ➤2010 மே 6: ஆ.ராசா – நீரா ராடியா பேசிய ஆடியோ வெளியானது. ➤2010 நவ 10: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்று சி.ஏ.ஜி குற்றம்சாட்டியது.
Similar News
News November 11, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..
News November 11, 2025
நாட்டை உலுக்கிய கார் வெடிப்பு: தலைவர்கள் இரங்கல்

டெல்லியில் ஹூண்டாய் கார் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் பதிவிட்டுள்ளார். டெல்லி சம்பவம் மனதை உலுக்கியதோடு, மிகுந்த வேதனை அளிப்பதாக ராகுல் காந்தியும் தெரிவித்துள்ளார். இதேபோல், நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், EPS உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News November 11, 2025
முதுகுவலியை தவிர்க்க… இதை செய்யுங்க!

இன்று முதுகுவலி ஏற்படுவது சாதாரணமாகிவிட்டது. நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, தசை இறுக்கம், நீண்ட பயணம், கனமான பையை சுமப்பது உள்ளிட்டவை இதற்கு காரணமாகலாம். இதை தவிர்க்க, 30 mins-க்கு ஒருமுறை, உட்கார்ந்த இடத்திலிருந்தே முடிந்தவரை திரும்புதல், நேராக உட்காருதல், அடிக்கடி எழுந்து உட்காருவது, நடைபயிற்சி போன்றவற்றை செய்யலாம். தரையில் பாயில் படுத்து உறங்குவது பெரும்பாலான முதுகுவலிகளை குணப்படுத்திவிடும்.


