News August 4, 2024

மாளவிகா மோகனனுக்கு ‘தங்கலான்’ படக்குழு வாழ்த்து

image

நடிகை மாளவிகா மோகனன் இன்று தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், ‘தங்கலான்’ படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Similar News

News January 13, 2026

ரேஷன் கார்டு தொலைந்தாலும் பொங்கல் பரிசு

image

ரேஷன் கார்டு தொலைந்து போனவர்களும், புதிய ரேஷன் கார்டு நகலுக்கு விண்ணப்பித்துள்ளவர்களும் பொங்கல் பரிசை பெறலாம் என உணவு வழங்கல் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன்படி, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் (அ) கார்டு எண் இருந்தால் போதும். பாயிண்ட் ஆஃப் சேல் கருவியில் கார்டு ஸ்கேனிங்கிற்கு பதிலாக, கார்டு எண்ணை பதிவு செய்து, கை ரேகை வாயிலாக ஆதார் சரிபார்க்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படும்.

News January 13, 2026

யாருக்கெல்லாம் தமிழக அரசின் விருது?

image

தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் சமூக நீதிக்காகப் பாடுபட்ட சிறந்த ஆளுமைகளுக்கு உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2025-ம் ஆண்டுக்கான பல்வேறு தலைவர்களின் பெயரிலான விருதுகளை பெறுவோரின் பட்டியலை அறிய, மேலே போட்டோக்களை ஸ்வைப் பண்ணுங்க.

News January 13, 2026

பள்ளிகளுக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை.. அரசு அறிவித்தது

image

புதுச்சேரியில் உள்ள பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு ஜன.15 – 18 வரை பொங்கல் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், போகிப் பண்டிகையை கொண்டாட ஏதுவாக நாளையும் (ஜன.14) விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் & அரசு அலுவலகங்களுக்கு 5 நாள்கள் பொங்கல் விடுமுறையாகும். இதனை ஈடுசெய்யும் விதமாக ஜன.31-ல் அரசு அலுவலகங்கள் செயல்படும்.

error: Content is protected !!