News February 28, 2025

ஏர்போர்ட்டில் இனி டீ ₹10

image

கொல்கத்தாவை தொடர்ந்து சென்னை ஏர்போர்ட்டிலும் `உடான் யாத்ரீ கஃபே’ என்ற பெயரில் மலிவு விலை உணவகத்தை மத்திய அமைச்சர் ராம் மோகன் திறந்து வைத்தார். ஏர்போர்ட்டில் ஒரு டீ, காபி குடிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ₹100 வரை செலவழிக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், இனி அவ்வளவு பணம் எல்லாம் செலவு செய்ய வேண்டாம். டீ ₹10, காபி ₹20, தண்ணீர் பாட்டில் ₹10, சமோசா ₹20, வடை ₹20க்கு வாங்க முடியும்.

Similar News

News February 28, 2025

200 இடங்களில் திமுக வெல்லும்: நடிகர் வடிவேலு

image

ஒவ்வொரு குடும்பத்தின் மூத்த மகனாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக நடிகர் வடிவேலு புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாட்டுக்கு அடையாளம் தமிழ் மொழிதான் என்றும், யாருக்கும் எந்த மொழியையும் கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் வெல்லும் எனவும், 200 இடங்களில் கண்டிப்பாக பிடிப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News February 28, 2025

மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அபார வெற்றி

image

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு அணியை வீழ்த்தி குஜராத் வென்றது. முதலில் விளையாடிய பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கனிகா அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து விளையாடிய குஜராத், 16.3 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் ஆஷ்லே கார்ட்னர் 58 ரன்களும், போப் லிட்ச்பீல்ட் 30 ரன்களும் எடுத்தனர்.

News February 28, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பயனில சொல்லாமை
▶குறள் எண்: 192
▶குறள்:
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
▶பொருள்: பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

error: Content is protected !!