News October 20, 2025

அக்.22-ல் பால் விநியோகத்தை நிறுத்தி வேலைநிறுத்தம்

image

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ₹15 உயர்த்த கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இது நடக்காததால், அக்.22-ல் தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் கூட்டுறவு ஒன்றியம் & தனியார் நிறுவனங்களுக்கு பால் விநியோகத்தை நிறுத்த உள்ளதாக தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் வேலுசாமி அறிவித்துள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகளுடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News December 12, 2025

வைடு வீசுவதில் பாரி வள்ளலாக மாறிய இந்திய அணி

image

SA-வுக்கு எதிரான <<18538227>>2-வது டி20-ல் இந்தியா<<>> படுதோல்வியை சந்திக்க இந்தியா விட்டுக்கொடுத்த Extras-ம் முக்கியமான காரணமாக அமைந்தது. அதிலும் இந்திய பந்துவீச்சாளர் 16 வைடுகளை வீசியது ரசிகர்களை எரிச்சலடைய வைத்தது. இதில் அர்ஷ்தீப் மட்டும் 9 வைடுகளை வீசினார். இதற்கு பனி ஒரு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் SA பந்து வீசும்போது இதைவிட அதிகமான பனி இருந்தும் அவர்கள் ஒரு வைடு மட்டுமே வீசியுள்ளனர்.

News December 12, 2025

எடையை குறைக்க தினமும் இத சாப்பிடுங்க போதும்!

image

உடல் எடையை குறைப்பதே, தற்போது பலருக்கும் ஒரு பிரச்னையாக உள்ளது. அதற்கு தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் போதும் என்கின்றனர் நிபுணர்கள். *இதில் உள்ள வைட்டமின் சி மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது *நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்துகிறது *கல்லீரல், கணையம் மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது *வளர்சிதை மாற்றம் மற்றும் குடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது *செரிமானத்தை சீராக்குகிறது.

News December 12, 2025

கேள்விகளுக்கு பதில் எங்கே? சு.வெங்கடேசன்

image

மதுரை, கோவை மெட்ரோ குறித்த கேள்விக்கு, மத்திய அரசு சரியான பதிலை அளிக்கவில்லை என MP சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆக்ரா, போபால், இந்தூர், நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை அணுகியதற்கும், மதுரை, கோவைக்கும் என்ன வேறுபாடு என்ற கேள்விக்கு, ‘பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை’ என்பது போல, PM E-Seva குளிரூடப்பட்ட பேருந்து திட்டம் பற்றி பதில் கூறுவதாக விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!