News August 5, 2024
மின் விநியோகத்தில் தமிழ்நாடு முதலிடம்

2023-24 சராசரி மின் விநியோகத்தில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. ராஜ்ய சபாவில் மத்திய அமைச்சர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், தமிழகத்தின் நகர் பகுதிகளில் நாளொன்றுக்கு 24 மணி நேரம் சராசரி மின் விநியோகம் நடைபெற்றதாகவும், ஊரகப் பகுதிகளில் 23.5 மணி நேரம் மின் விநியோகம் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேசிய சராசரியாக நகர்புறத்தில் 23.4 மணி நேரமும், ஊரகப் பகுதிகளில் 21.9 மணி நேரமும் உள்ளது.
Similar News
News January 13, 2026
குழந்தைகளுக்காக தூங்கும் முன் இத பண்ணுங்க

தினமும் தூங்குவதற்கு முன் உங்கள் குழந்தையிடம் 5 நிமிடங்கள் மனம் விட்டு பேசுங்கள். நாள் முழுக்க என்னென்ன செய்தார்கள், எது அவர்களை கஷ்டப்படுத்தியது, பிடித்த விஷயங்கள் எது, கற்றுக்கொண்டது என்ன என்பதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள பிணைப்பை அதிகரிக்கிறது. அத்துடன், அவர்களும் நிம்மதியாக உணர்வார்கள் என நிபுணர்கள் சொல்கின்றனர். SHARE.
News January 13, 2026
‘பராசக்தி’ படக்குழு வெற்றிக் கொண்டாட்டம்

பொங்கலை முன்னிட்டு ஜன.10-ல் ரிலீசான ‘பராசக்தி’ படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 2 நாள்களில் உலகம் முழுவதும் ₹51 கோடி வசூல் செய்ததாக அபிஷியல் அறிவிப்பு வெளியான நிலையில், படக்குழுவினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சுதா கொங்கரா, சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நீங்க பராசக்தி பார்த்துட்டீங்களா?
News January 13, 2026
சாம்சங்கை பின்னுக்கு தள்ளிய ஆப்பிள்

2025-ல் ஆப்பிள் நிறுவனம் நம்பர் ஒன் ஸ்மார்ட்போன் பிராண்டாக உருவெடுத்துள்ளது. ஐபோன் 17-ன் வெற்றி மற்றும் 16-க்கு ஏற்பட்ட தேவை காரணமாக விற்பனையில் 10% வளர்ச்சியுடன், கடந்த 14 ஆண்டுகளில் முதல்முறையாக முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. சாம்சங் 2-வது இடத்தில் உள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில், தற்போது ஆப்பிள் 20%, சாம்சங் 19%, சியோமி 13%, விவோ 8%, ஒப்போ 8% மற்றும் பிற பிராண்டுகள் 32% பங்கைக் கொண்டுள்ளன.


