News August 21, 2024
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு- 2024 தொடக்கம்

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு – 2024ஐ CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை லீலா பேலஸில் இன்று காலை ₹17,616 கோடி மதிப்பிலான 19 திட்டங்களை தொடங்கி வைத்து, ₹51,157 கோடி முதலீடு கொண்ட 28 திட்டங்களுக்கு CM அடிக்கல் நாட்டினார். திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் 1,06,803 வேலை வாய்ப்புகள் உருவாகும் எனக் கூறப்படுகிறது.
Similar News
News January 23, 2026
தமிழக கட்சிகளின் முதல் சின்னம் எது தெரியுமா?

தவெகவுக்கு ‘விசில்’ சின்னம் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதனை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். கட்சி தொடங்கிய புதிதில் எல்லா கட்சியினருக்கும் இந்த கொண்டாட்டம் இருந்திருக்கும். அப்படி தமிழகத்தின் பிரதான கட்சிகள் முதல்முதலில் பெற்ற சின்னம் எது, அதை எப்போது பெற்றனர், பின்னர் என்னவாக மாறியது என்பதை மேலே போட்டோஸை வலப்பக்கமாக swipe செய்து பாருங்கள். யாருக்கு எந்த சின்னம் தற்போதும் பொருத்தமாக உள்ளது?
News January 23, 2026
விசில் சின்னம்.. விஜய்க்கு புதிய நெருக்கடி

விஜய்க்கு ஒதுக்கப்பட்டுள்ள விசில் சின்னம் நிரந்தரமாக மாற சில விதிமுறைகள் உள்ளன. சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகள் / 2 சட்டமன்ற இடங்கள் (அ) நாடாளுமன்றத் தேர்தலில் 6% வாக்குகள், 1 சீட் வென்றிருந்தாலோ ஒரு கட்சிக்கு மாநில அங்கீகாரம் வழங்கப்பட்டு நிரந்தர சின்னம் ஒதுக்கப்படும். இதனை செய்துகாட்ட தவறினால் தவெகவுக்கு இருக்கும் அங்கீகாரம் மற்றும் நிரந்தரச் சின்னம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.
News January 23, 2026
Non-Stick பாத்திரங்களில் ஒளிந்துள்ள ஆபத்து! உஷார்

டெஃப்ளான் பொருளால் பூசப்பட்டிருக்கும் பாத்திரங்களே நான்ஸ்டிக் பாத்திரங்கள். டெஃப்ளான் என்பது கார்பன் & புளோரின் அணுக்களால் ஆன ஒரு செயற்கை ரசாயனம். 260° C வரை இந்த நான்ஸ்டிக் பாத்திரங்களை சூடாக்கி சமைக்கலாம். அதற்கு மேல், சூடாக்கினால் டெஃப்ளான் பூச்சுகள் உடைந்து, நச்சுப் புகைகள் வெளியாகின்றன. இவற்றை சுவாசிக்கும் போது, அது டெஃப்ளான் காய்ச்சல், நுரையீரல் பாதிப்பிற்கும் வழிவகுக்கும்.


