News April 1, 2025
பார்லிமெண்டை அதிரவைத்த தமிழக மீனவர்கள் பிரச்னை

தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதை தடுக்க அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என லோக் சபாவில் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். அதே போல், மீனவர்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா என கனிமொழி கேள்வி எழுப்பினார். இதற்கான பதிலுரையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததால் உடைமைகள் பறிமுதல் செய்யப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
Similar News
News January 19, 2026
தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார்

நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அன்று பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டுவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
News January 19, 2026
அரசியலை விட்டு விலக முடிவா? ரோஜா விளக்கம்

பிரபல நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான நடிகை ரோஜா அரசியலில் இருந்து விலகுவதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு பதிலளித்துள்ள அவர், தான் தற்போது சினிமா, டி.வி. நிகழ்ச்சிகளில் அதிகமாக வருவதால், அரசியலை விட்டு விலகி விடுவேன் என்று நினைக்கிறார்கள். நான் ஒருபோதும் பயந்து ஓடவோ, விலகவோ மாட்டேன். நான் ஒரு பெண் என்பதால் விமர்சனம் செய்கிறார்கள் என்று கூறினார்.
News January 19, 2026
விஜய்யுடன் கூட்டணியை விரும்பாத காங்., தலைமை!

தவெக உடன் கூட்டணி இல்லை என்பதை காங்கிரஸ் தலைமை உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக கூட்டணியிலேயே தொடர்ந்து பயணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் – தவெக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் திமுக கூட்டணியில் தொடர விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


