News April 18, 2024

இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த தமிழ் பட நடிகை

image

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் 2018இல் வெளியான படம் ‘கனா’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் சேர்ந்து சில நிஜ கிரிக்கெட் வீராங்கனைகளும் நடித்திருந்தனர். அதில் ஒருவர் தான் சஜனா சஜீவன். தற்போது இவருக்கு வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. டி20 தொடர் ஏப்.20 இல் தொடங்குகிறது.

Similar News

News November 12, 2025

அரசு விடுமுறையில் மாற்றமா?

image

14/04/2026 சித்திரை முதல்நாள் <<18262209>>விடுமுறை<<>> மீண்டும் இணையத்தில் மோதலாக மாறியுள்ளது. தமிழர்களின் நம்பிக்கைகளை சீர்குலைத்து வந்த திமுகவினருக்கு முற்றுப்புள்ளி வைத்ததற்கு நன்றி என பாஜகவின் நாராயணன் திருப்பதி பதிவிட்டார். அதற்கு திமுகவினர் பலரும் பதிலடி கொடுக்கும் வகையில் 2023, 2024, 2025 விடுமுறை பட்டியல்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் ஏப்.14 அன்று தமிழ்ப் புத்தாண்டு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 12, 2025

டெல்லி போலீசுக்கு மீண்டும் அலர்ட்

image

டெல்லி கார் வெடிப்பு தொடர்பாக அம்மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும், சோதனைச் சாவடிகளுக்கும் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளிடம் இருந்த மற்றொரு கார் சிவப்பு நிற Ford Eco Sport என்று அடையாளம் காணப்பட்டு, அதை விரைந்து கண்டுபிடிக்க டெல்லி போலீஸ் மற்றும் அண்டை மாநில போலீசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே அந்த காரை கண்டுபிடிக்க<<18265447>> 5 போலீஸ் குழு<<>> அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 12, 2025

கார் வெடிப்பு பின்னணியில் துருக்கி பயங்கரவாதிகளா?

image

டெல்லி கார் வெடிப்புக்கு துருக்கியில் வைத்து திட்டமிட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சதித்திட்டத்தை அரங்கேற்றிய டாக்டர் உமர் மற்றும் கூட்டாளி முசாமில், துருக்கியில் ஜெய்ஸ் இ முகமது ஏஜென்டை சந்தித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பாஸ்போர்ட்டை கைப்பற்றியதன் மூலம் இத்தகவல்கள் கிடைத்துள்ளன. துருக்கி, சில வருடங்களாக பாக்., ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!