News June 17, 2024
T20WC: இந்திய அணியின் சூப்பர் 8 போட்டி தேதிகள்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்ற 8 அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்திய அணி மோதவிருக்கும் 3 அணிகளின் பட்டியல் இதோ.
ஜூன் 20 – இந்தியா vs ஆஃப்கானிஸ்தான்
ஜூன் 22 – இந்தியா vs வங்கதேசம்
ஜூன் 24 – இந்தியா vs ஆஸ்திரேலியா
Similar News
News January 15, 2026
இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி விற்ற திமுக நிர்வாகி!

நெல்லையில் இன்ஸ்டாகிராம் மூலம் துப்பாக்கி விற்பனை செய்ததாக திமுக பொறியாளர் அணி நிர்வாகி ரத்தினம் பாலா உள்ளிட்ட மூவர் கைதானதை அதிமுக விமர்சித்துள்ளது. திமுக ஆட்சியில் கூலிப்படை, போதைப்பொருள் தாண்டி துப்பாக்கி நெட்வொர்க்கும் வளர்ந்துள்ளதாகவும், இச்செய்தியால் மக்கள் நிம்மதியாக நடமாட அச்சப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அதோடு கைதான ரத்தினம் பாலா DCM-உடன் இருக்கும் போட்டோவும் வைரலாகி வருகிறது.
News January 15, 2026
ராஜ மாதா காலமானார்

தர்பங்கா அரச குடும்பத்தின் கடைசி மகாராணி காமசுந்தரி தேவி(96) காலமானார். மகாராஜா காமேஷ்வர் சிங் மறைவிற்கு பிறகு, ராஜமாதாவாக உருவெடுத்த இவர் தர்பங்காவில் பனாரஸ் இந்து, பாட்னா, அலகாபாத் பல்கலைக்கழகங்கள் அமைவதற்கு நிதியுதவி அளித்தார். 1962-ல் சீனாவுடனான போரின்போது இந்திய ராணுவத்திற்கு 600 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்தார். காமசுந்தரி மறைவால் தர்பங்கா அரச குடும்பத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.
News January 15, 2026
திரை நட்சத்திரங்களின் பொங்கல் க்ளிக்ஸ்! (PHOTOS)

கரும்பு, இனிப்பு பொங்கல் என தமிழகமே பொங்கல் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. இந்தவேளையில், நமது திரை நட்சத்திரங்களும் தங்களது வீடுகளில் பாரம்பரிய உடையில் பொங்கலை சிறப்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன், கார்த்தி, மாரி செல்வராஜ், சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிய நிலையில், அவர்களின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை மேலே SWIPE பண்ணி பாருங்க!


