News June 17, 2024
T20 WC: வீணான இலங்கை அணியின் வெற்றி

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய இலங்கை 201 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சரித் அசலங்கா, குசல் மெண்டிஸ் தலா 46 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து விளையாடிய நெதர்லாந்து, ஆரம்பம் முதலே திணறியதால் 118 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்த இரு அணிகளும் ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. இதனால் இலங்கையின் வெற்றி வீணானதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
Similar News
News January 18, 2026
இந்திய அரசியலமைப்பு திருத்தம் வரலாறு தெரியுமா?

இந்திய அரசியலமைப்பு சட்டமே உலகிலேயே அதிக திருத்தங்களுக்கு உள்ளான அரசியலமைப்பு சட்டமாகும். நவம்பர் 26, 1949 அன்று அரசியலமைப்பு சபையால் அங்கீகரிக்கப்பட்டு ஜனவரி 26, 1950 அன்று நடைமுறைக்கு வந்ததிலிருந்து, இதுவரை 106 முறை திருத்தப்பட்டுள்ளது. கடைசியாக செப்டம்பர் 2023-ல் திருத்தப்பட்டது. இந்தத் திருத்தம், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை கட்டாயமாக்கியது.
News January 18, 2026
₹16 லட்சம் கோடியை எட்டும் சில்லறை ஆடை வணிகம்

நாட்டில் சில்லறை ஆடை வணிகம் 2030-ம் ஆண்டுக்குள் ₹16 லட்சம் கோடியாக விரிவடையும் என்று ‘CareEdge’ தெரிவித்துள்ளது. தற்போது, சில்லறை வணிகம் ₹9.3 லட்சம் கோடியுடன் சந்தையில் 41% பங்கைக் கொண்டுள்ளது. பிராண்டட் ஆடைகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், இது மேலும் 13% வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2 & 3 அடுக்கு நகரங்களில் ஜூடியோ, மேக்ஸ், ரிலையன்ஸ் உள்ளிட்டவை வணிகத்தை விரிவுபடுத்தி வருகின்றன.
News January 18, 2026
விக்ரம் சாராபாய் பொன்மொழிகள்

*முன்னேற விரும்பினால், புதிய பாதைகளைத் தேடத் தயங்கக்கூடாது. *இளைஞர்களின் கனவுகள் தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குகின்றன. *இரைச்சலுக்கு மத்தியில் இசையை கேட்கத் தெரிந்தவனால் மகத்தான சாதனைகளை நிகழ்த்த முடியும். *விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்து வரும் நாடுகளின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமானவை. *ஒரு நாட்டின் வளர்ச்சி அதன் அறிவியல் மனப்பாங்கில் தான் அடிப்படையாக உள்ளது.


