News April 7, 2024

டக் அவுட் ஆனார் சூர்யா

image

காயத்தில் இருந்து மீண்டு வந்த மும்பை அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் முதல் போட்டியிலேயே டக் அவுட் (0) ஆனார். ஒரு பக்கம் அதிரடியாக ஆடினாலும், மறுபக்கம் அவ்வப்போது டக் அவுட் ஆகுபவர் சூர்யா. பல மாதங்கள் ஓய்வில் இருந்துவிட்டு இன்று அணிக்கு திரும்பிய அவர், அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாவது பந்திலேயே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

Similar News

News December 12, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 12, கார்த்திகை 26 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 1:45 PM – 2:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 AM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

News December 12, 2025

சஞ்சுவை ஓரங்கட்டியது ஏன்? நெட்டிசன்கள்

image

SA-க்கு எதிரான 2 டி20 போட்டிகளிலும் கில் படுமோசமாக சொதப்பியுள்ளார். முதல் போட்டியில் 4 ரன்களும், 2-ம் போட்டியில் டக் அவுட்டிலும் வெளியேறியுள்ளார். இதை குறிப்பிட்டு, கில்லை 3 ஃபார்மெட் வீரராக வளர்த்தெடுக்க சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வாலை தேர்வுக்குழு ஓரங்கட்டியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். கில்லால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை, இது அணிக்கும் செய்யும் துரோகம் என்றும் சாடியுள்ளனர்.

News December 12, 2025

இந்தியா மீது 50% வரிவிதித்த மெக்ஸிகோ

image

US பாணியில் மெக்ஸிகோவும் வரிவிதிக்க முடிவு செய்துள்ளது. ஆசிய நாடுகளின் இறக்குமதிகளுக்கு 50% வரிவிதிக்க அந்நாட்டு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1400+ பொருள்கள் இந்த வரி வரம்பில் அடங்கும். இதனால் இந்தியாவின் ஜவுளி, ஆட்டோமொபைல், பிளாஸ்டிக், காலணி துறைகளின் ஏற்றுமதி பாதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

error: Content is protected !!