News July 16, 2024
மாணவர்கள் பஞ்சர் கடை போடலாம்: பாஜக எம்எல்ஏ

மாணவர்கள் டிகிரி வாங்குவதால் எந்த பலனும் ஏற்பட போவதில்லை என ம.பி எம்எல்ஏ பன்னலால் ஷக்யா தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி காலேஜ் ஆப் எக்ஸலன்ஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர், கல்லூரி பட்டங்களால் எதுவும் நடக்கப்போவதில்லை என்பதை மாணவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். மாணவர்கள் குறைந்தபட்சம் பஞ்சர் கடை போட்டு பிழைக்க வேண்டும் என்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News July 9, 2025
பரந்தூர் விவகாரம்: நிலம் வழங்கியோருக்கு இழப்பீடு

பரந்தூர் விமான நிலையம் அமைக்க இடம் கொடுத்த நில உரிமையாளர்கள் 19 பேருக்கு இன்று இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் பரந்தூர், பொடவூர், நெல்வாய், வளத்தூர், அக்கம்மாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 19 பேர் நிலத்தை கொடுக்க ஒப்புக்கொண்டனர். அதன்படி 17 ஏக்கர் நிலம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
News July 9, 2025
13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இன்று (ஜூலை 9) இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதாவது, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தி.மலை, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, நெல்லையில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது.
News July 9, 2025
கோயில் நிதியில் கல்லூரியா? இபிஎஸுக்கு சேகர்பாபு பதிலடி

அறியாமை இருளில் இபிஎஸ் மூழ்கியுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். கோயில் நிதியை எடுத்து கல்லூரிகள் கட்டப்படுவதாக கோவை பிரச்சாரத்தில் <<17000758>>இபிஎஸ் குற்றம்சாட்டியதற்கு<<>> சேகர்பாபு இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று வரலாறு தெரியாமல் இபிஎஸ் பேசிவருவதாகவும் சாடியுள்ளார்.