News October 10, 2025
விளம்பர அரசியலை விட்டு விவசாயிகளுக்கு உதவுங்க: PMK

நெல் விளைச்சல் அதிகரித்துள்ள போதிலும், கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வசூலிக்கப்படுவதால் நெல் மூட்டைகளை விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்பதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். TN அரசு விளம்பர அரசியல் செய்வதை விடுத்து நெல்லுக்கான ஈரப்பத வரம்பை அதிகரிக்கவும், நெல் மணிகளை விரைந்து கொள்முதல் செய்யவும், லஞ்சத்தை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 15, 2025
சற்றுமுன்: தங்கம் விலை குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $105 குறைந்து $4,080-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (நவ.14) தங்கம் விலை சவரனுக்கு ₹1,200 குறைந்து, ₹93,920-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 15, 2025
பிஹார் CM நிதிஷ்குமார் இல்லையா?

பிஹாரில் <<18291958>>NDA கூட்டணி<<>> வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, நிதிஷ்குமார் பிஹார் CM ஆக இருந்தார், இருக்கிறார், தொடர்ந்து இருப்பார் என JD(U) கட்சி, தனது X பக்கத்தில் பதிவிட்டது. ஆனால், பதிவிட்ட 10 நிமிடங்களிலேயே அந்த பதிவை டெலிட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதால், நிதிஷ்குமாருக்கு CM பதவி கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
News November 15, 2025
முதுகு வலி பிரச்னைக்கு இந்த உடற்பயிற்சி பண்ணுங்க!

குளுட் பிரிட்ஜ், இடுப்பு கீழ் தசைகளை வலுவடைய செய்கிறது ✱தரையில் நேராக படுத்து, முழங்கால்களை வளைக்கவும் ✱இரண்டு கால்களுக்கும் இடையில் சில அங்குல இடைவெளி விடவும் ✱கைகளை பக்கவாட்டில் வைக்கவும் ✱வயிற்றை இறுக்கி, இடுப்பை தரையிலிருந்து மேலே உயர்த்தவும் ✱ஒரு கணம் இந்த நிலையில் இருந்துவிட்டு, மீண்டும் இடுப்பை கீழே இறக்கவும். இப்படி 15 முறை, 2 செட்களாக செய்யலாம். SHARE IT.


