News April 18, 2024
‘ஸ்டார்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘டாடா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கவின் அடுத்ததாக இளன் இயக்கத்தில் ‘ஸ்டார்’ படத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் லால், கீதா கைலாசம், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. முன்னதாக, இப்படத்தின் “விண்டேஜ் லவ்…” பாடல் வெளியாகிக் கவனம் ஈர்த்தது.
Similar News
News November 13, 2025
விஜயகாந்த் வீட்டில் போலீஸ் குவிப்பு.. பதற்றம் உருவானது

சமீப காலமாக, அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்று, பிரேமலதா விஜயகாந்த் வீட்டுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸ் குவிக்கப்பட்டு அங்கு சோதனை நடைபெற்றது. ஆனால் இது புரளி என்பது சோதனையில் தெரியவந்தது. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், KS ரவிக்குமார், சாக்ஷி உள்ளிட்டோர் வீடுகளுக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
News November 13, 2025
ONGC-ல் வேலை.. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ONGC-ல் காலியாக உள்ள 2,623 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18- 24 வயதுக்குட்பட்ட 10-வது, 12-வது, ITI, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். Merit List & Certificate Verification மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹8,200- ₹12,300 வரை மாதச்சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <
News November 13, 2025
ஆம்னி பஸ் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: EPS

தமிழகத்தில் ஆம்னி பஸ் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண அரசை, EPS வலியுறுத்தியுள்ளார். அண்டை மாநிலங்கள் அபராதம் விதிப்பதால், தமிழக ஆம்னி பஸ்கள் கடந்த 9-ம் தேதி முதல் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படாமல் உள்ளதாக கூறிய அவர், இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


