News August 18, 2025
அணில் மரத்தில் இருக்கணும்: விஜய்யை சீண்டிய சீமான்

தவெகவின் கொள்கை என்னவென்று கேட்டால் ‘தளபதி’ என கோஷமிடுவதாக சீமான் சாடியுள்ளார். செஞ்சி நாதக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், புலி வெறிகொண்டு வேட்டையாடிக் கொண்டிருக்கும்போது அணில் குறுக்கும் மறுக்கும் ஓடுவதாகவும், அணில் பத்திரமாக மரத்தில் ஏறி இருக்க வேண்டும் என்றும் விமர்சித்தார். ஆரம்பத்தில் தம்பி என விஜய்யை அழைத்து வந்த அவர், தவெக முதல் மாநாட்டுக்குப் பிறகு கடுமையாக விமர்சித்து வருகிறார்.
Similar News
News December 12, 2025
நிதிஷிடம் புதிய பஞ்சாயத்தை கூட்டும் லாலு மகள்!

லாலு பிரசாத்தின் மகள் <<18303650>>ரோகிணி ஆச்சார்யா<<>> குடும்ப சண்டை காரணமாக அரசியலை விட்டு விலகினார். இந்நிலையில், X பதிவில் நிதிஷ்குமாரின் மகளிர் திட்டங்களை சூசகமாக பாராட்டிய அவர், ‘ஒவ்வொரு மகளும் எந்தவித பயமும் இல்லாமல் பெற்றோர் வீட்டிற்கு பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது, குடும்ப பூசலின் உச்சமா? JDU-வில் இணைவதற்கான அச்சாரமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
News December 12, 2025
பொங்கல் பரிசு: ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்!

ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை ஒரே நாளில் வழங்கும் வகையில் நாளை(டிச.13) சிறப்பு முகாம்கள் நடக்கிறது. சென்னை(மண்டல அலுவலகங்கள்), திருச்சி, கரூர், மதுரை, சிவகங்கை, நாமக்கல், நெல்லை மாவட்டங்களில் தாசில்தார் அலுவலகங்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன. பொங்கல் பரிசு கணக்கெடுப்பாக இந்த பணிகள் மற்ற மாவட்டங்களிலும் விரைவில் நடைபெறவுள்ளன.
News December 12, 2025
Why SKY? கொந்தளிக்கும் இந்திய ரசிகர்கள்!

இந்திய T20 கேப்டன் SKY மோசமான ஃபார்மில் உள்ளார். கடந்த 20 இன்னிங்ஸில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. நேற்றைய போட்டியிலும் வெறும் 5 ரன்னில் வெளியேறிய அவர், ஒரே ஒரு போட்டியில் மட்டும் 47* ரன்களை எடுத்துள்ளார். அடுத்த ஆண்டு T20 WC நடைபெறும் நிலையில், இது இந்திய அணிக்கு பின்னடைவான விஷயமே. கேப்டன்ஷிப் மட்டுமில்லை, பேட்டிங் வேண்டுமல்லவா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?


