News July 4, 2025
தமிழ் கடவுளை தரிசிக்க இன்று முதல் சிறப்பு பேருந்து

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் அங்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனையொட்டி, இன்று முதல் 6-ம் தேதி வரை திருச்செந்தூருக்கு பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதேபோல், பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப ஏதுவாக 7-ம் தேதி திருச்செந்தூரில் இருந்தும் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.
Similar News
News November 10, 2025
விநாயகர் போல் காட்சி அளிக்கும் முருகர் கோயில் மலை

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த மலையானது பார்ப்பதற்கு யானை உட்கார்ந்த நிலையில், துதிக்கையால் நிலத்தில் ஊன்றியிருப்பது போல் இருக்கும். முருகன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் இரு கைகளை உடைய சாத்வீக மூர்த்தியாக கையில் வேலுடன், மயில் வாகனத்தில் காட்சியளிக்கின்றார். தொழில் வளம் சிறக்க, குடும்ப பிரச்சனை தீர பக்தர்கள் முருகனை வணங்கி செல்கின்றனர்.
News November 10, 2025
Bussiness Roundup: EV கார் விற்பனை 57% அதிகரிப்பு

*அக்டோபரில் மின்சார கார்கள் விற்பனை 57.50%ஆக உயர்வு. *மத்திய அரசு அலுவலகங்களில் சேகரித்த பழைய பொருள்களை விற்றதன் மூலம் ₹800 கோடி வருவாய். *நாட்டில் நிலக்கரி உற்பத்தியை, அடுத்த ஆண்டில் 875 டன் வரை அதிகரிக்க திட்டம். *அந்நிய செலாவணி கையிருப்பு ₹61 லட்சம் கோடியாக சரிவு. *2030-க்குள் இந்தியாவின் டீப் -டெக் சந்தை மதிப்பு ₹2.66 லட்சம் கோடியாக உயரும் என தகவல்.
News November 10, 2025
பிரியாத பறவைகள் PHOTOS

சில பறவைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆயுள் முழுவதும் தங்கள் இணைகளுடனே சேர்ந்து வாழ்கின்றன`. அவற்றின் வாழ்வில் காணப்படும் நம்பிக்கையும், ஒருவரை ஒருவர் காக்கும் பொறுப்புணர்வும் நெகிழ்ச்சியடைய செய்கின்றன. இந்த இயற்கையில் அற்புதமான வரம் பெற்ற பறவைகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க


