News August 4, 2024
முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய சிராஜ்

இலங்கை, இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதைத் தொடர்ந்து முதல் பந்தினை எதிர்கொண்ட நிசங்கா, சிராஜின் பந்தில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதோடு, சிராஜின் அபார பந்துவீச்சால் முதல் ஓவர் மெய்டனாக முடிந்தது.
Similar News
News January 23, 2026
SPORTS ROUNDUP: 2-வது T20I-ல் குல்தீப் யாதவ்?

*வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, சர்வதேச கிரிக்கெட்டில் இன்றுடன் 10 வருடங்களை நிறைவு செய்துள்ளார் *கை விரல் காயம் காரணமாக, அக்சர் படேல் விலகினால், NZ-க்கு எதிரான 2-வது T20I-ல் குல்தீப் யாதவ் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது *தொடையில் ஏற்பட்ட காயத்தால் T20I WC-ல் இருந்து NZ வீரர் ஆடம் மில்னே விலகி இருக்கிறார் *ஓய்வு பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேஹவாலுக்கு சச்சின், கோலி வாழ்த்து
News January 23, 2026
மோடியின் கூட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம்: ராமதாஸ்

PM மோடி பங்கேற்கும் கூட்டத்தில் அனுமதி பெறாத மாம்பழம் சின்னத்தை பயன்படுத்துவது அதிகார துஷ்பிரயோகம் என ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம்(ECI) அங்கீகரிக்காத சின்னத்தை பொதுக்கூட்ட மேடையில் காட்சிப்படுத்துவது சட்டவிரோதம் எனவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். பாமகவுக்கு யார் தலைவர் என்பதில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவுகிறது.
News January 23, 2026
ஒரே நாளில் ₹1 லட்சம் கோடியை இழந்த அதானி

அதானி குழுமத்தின் பங்குகள் இன்று ஒரே நாளில் ₹1 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது. முதலீடு விவகாரத்தில் லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில், அதானிக்கு சம்மன் அனுப்ப அனுமதி கேட்டு அமெரிக்க பங்குச்சந்தை ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் அதானி குழுமத்தின் பங்கு 10% வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் எதிரொலியால் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள LIC-க்கும் ₹12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.


