News November 19, 2025
SIR-க்காக மக்களுக்கு உதவி செய்ய குழு அமைத்த விஜய்

SIR படிவங்களை பூர்த்தி செய்வதில் பொதுமக்களிடையே பெரும் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில். SIR தொடர்பாக பொதுமக்களுக்கு உதவ, தவெக சார்பில் 16 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் ஆலோசனை குழு கூட்டத்தில் பங்கேற்கும் விஜய், SIR படிவங்களை பூர்த்தி செய்ய பொதுமக்களுக்கு தவெக பாக முகவர்கள் உதவி செய்ய வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கவுள்ளார்.
Similar News
News January 21, 2026
திருவாரூரில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஷரணப்பா தல்வார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம் வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த சிறப்பு வாகனம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பம் பெறுதல், விண்ணப்பித்தல், கட்டணம் செலுத்துதல் போன்ற சேவைகளை எளிதாக பெற்று கொள்ளலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
மீண்டும் NDA கூட்டணியில் இணைந்தார் TTV

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்காக NDA கூட்டணியில் இணைந்துள்ளதாக TTV தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், அமமுகவிற்கு மட்டும் அல்ல, TN-க்கே இது நற்செய்தி என்றும், மக்கள் விரும்பும் நல்லாட்சியை உருவாக்கவே இந்த கூட்டணி எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் அதிமுகவுடன் இருப்பது பங்காளி சண்டை மட்டுமே என்றவர், விட்டுக்கொடுப்பவர் கெட்டுபோவதில்லை எனவும் பஞ்ச் பேசியுள்ளார்.
News January 21, 2026
WhatsApp-ல் ‘Storage Full’ பிரச்னையா?

WhatsApp-ல் தானாகவே பல தரவுகள் டவுன்லோடாகி, ‘Storage Full’ பிரச்னையை பலரும் சந்திக்கிறோம். இது எரிச்சலான விஷயமாகும். இந்த பிரச்னையில் இருந்து தப்பிக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. WhatsApp-ல் வலது மூலையில் இருக்கும் 3 புள்ளிகளை கிளிக் செய்து அதில், ‘Settings’-ஐ தேர்வு செய்யவும். அதில், ‘Chats’-ஐ கிளிக் செய்து, Media Visibility-ஐ Off செய்யவும். இது போனின் Storage பயன்பாட்டை மேம்படுத்த உதவும்.


