News April 22, 2025
வானில் ஒளிரப் போகும் வெள்ளி

வீனஸ் கிரகம் (வெள்ளி), வரும் 24-ம் தேதி வானில் மிகவும் பிரகாசமாக காணப்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். பூமிக்கு மிக அருகில் நெருங்கி வரும் அது, -4.4 மேக்னிட்யூட் அளவு வெளிச்சத்துடன் காணப்படும். வியாழக்கிழமை சூரிய உதயத்துக்கு முன் நிலவுக்கு அருகே வெள்ளிக்கிரகத்தை கண்டு களிக்கலாம். மீண்டும் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம்தான் வெள்ளியை இதுபோன்று பிரகாசமாக பார்க்க முடியும்.
Similar News
News November 19, 2025
PM மோடி அணிந்திருக்கும் வாட்ச்சின் சிறப்பு

PM மோடி ஒரு வெற்றிகரமான அரசியல்வாதி மட்டுமல்ல, ஃபேஷன் உணர்வும் கொண்டவர். அந்தவகையில், அவர் அணிந்துள்ள வாட்ச் ஒரு தனி சிறப்பை கொண்டது. அதில், 1947-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் அச்சிடப்பட்ட புலியின் உருவம் பொறித்த கடைசி ₹1 நாணயம் இடம்பெற்றுள்ளது. ஜெய்ப்பூர் வாட்ச் நிறுவனம், ஜப்பானின் மியோட்டா நிறுவனத்துடன் இணைந்து இந்த வாட்ச்சை தயாரித்துள்ளது. இதன் விலை ₹55,000 -₹60,000 ஆகும்.
News November 19, 2025
தீவிரவாத வழக்கில் கைதான டாக்டர் மீது ஜெயிலில் தாக்குதல்

குஜராத்தில் கடந்த 9-ம் தேதி அகமது மொய்தீன் உட்பட 3 டாக்டர்கள், அபாயகரமான ரசாயனத்துடன் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்டனர். குஜராத் சபர்மதி சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அகமது மீது, சக கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், தாக்குதலின் காரணம் குறித்து விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.