News August 7, 2024
ராஜமௌலி இயக்கத்தில் ‘சியான்’ விக்ரம்?

இயக்குநர் ராஜமௌலி நீண்ட கால நண்பர், அவர் படத்தில் நடிக்க வெகுநாட்களாகவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக, ‘தங்கலான்’ இசைவெளியீட்டு விழாவில் விக்ரம் பேசியுள்ளார். மேலும், அது எந்த படம் என இன்னும் முடிவாகவில்லை என்றும், விரைவில் ஒரு படத்தில் இணைவோம் எனவும் அவர் கூறியுள்ளார். அது, மகேஷ்பாபு நடிப்பில் ராஜமௌலி இயக்கப்போகும் புதிய பிரம்மாண்ட படத்தில்தான் என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
பிஹார் CM பதவியேற்பு விழா: EPS-க்கு அழைப்பு

பிஹார் CM பதவியேற்பு விழாவில் பங்கேற்க EPS-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிஹாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் NDA கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, வரும் 20-ம் தேதி 10-வது முறையாக நிதிஷ் குமார் CM ஆக பதவியேற்க உள்ளார். இதில், PM மோடி, மூத்த மத்திய அமைச்சர்கள், NDA கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

திமுகவுடன் கூட்டணி ஏன்? மனம் திறந்த MP கமல்ஹாசன்

TV ரிமோட்டை தூக்கி எறிந்துவிட்டு தற்போது திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது ஏன் என்பது குறித்து முதல்முறையாக கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். தஞ்சையில் பேசிய அவர், ஜனநாயக ரீதியாக விமர்சித்ததாகவும், தற்போது மாநிலத்தின் ரிமோட் வேறொருவரிடம் சென்றுவிடக் கூடாது என்பதால் திமுகவுடன் கூட்டணி சேர்ந்ததாகவும் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இணைந்தது குறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில் விளக்கம் அளித்தார்.