News August 5, 2024
இந்தியா வந்தார் ஷேக் ஹசீனா

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அந்நாட்டில் இருந்து தப்பி திரிபுரா மாநிலம் அகர்தலாவிற்கு வந்துள்ளார். இடஒதுக்கீடு போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த அவர், ஹெலிகாப்டர் மூலம் இந்தியா வந்துள்ளார். அவர் இங்கிருந்து லண்டன் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ஷேக் ஹசீனாவின் மகள் லண்டனில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 15, 2026
ராஜ மாதா காலமானார்

தர்பங்கா அரச குடும்பத்தின் கடைசி மகாராணி காமசுந்தரி தேவி(96) காலமானார். மகாராஜா காமேஷ்வர் சிங் மறைவிற்கு பிறகு, ராஜமாதாவாக உருவெடுத்த இவர் தர்பங்காவில் பனாரஸ் இந்து, பாட்னா, அலகாபாத் பல்கலைக்கழகங்கள் அமைவதற்கு நிதியுதவி அளித்தார். 1962-ல் சீனாவுடனான போரின்போது இந்திய ராணுவத்திற்கு 600 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளித்தார். காமசுந்தரி மறைவால் தர்பங்கா அரச குடும்பத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.
News January 15, 2026
திரை நட்சத்திரங்களின் பொங்கல் க்ளிக்ஸ்! (PHOTOS)

கரும்பு, இனிப்பு பொங்கல் என தமிழகமே பொங்கல் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. இந்தவேளையில், நமது திரை நட்சத்திரங்களும் தங்களது வீடுகளில் பாரம்பரிய உடையில் பொங்கலை சிறப்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன், கார்த்தி, மாரி செல்வராஜ், சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிய நிலையில், அவர்களின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்களை மேலே SWIPE பண்ணி பாருங்க!
News January 15, 2026
₹1,000 உரிமைத் தொகை.. முக்கிய அறிவிப்பு வந்தது

₹1,000 மகளிர் உரிமைத் தொகை இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை பெற்று வருபவர்கள், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகையை பெற முடியாது என அரசு தெரிவித்துள்ளது. இந்த உதவித் தொகையானது தகுதிக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது. உரிமைத்தொகை மட்டுமல்லாது, வேறு எந்தவித உதவித்தொகை பெறுபவராக இருந்தாலும் வேலைவாய்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.


