News August 5, 2024
டெல்லி வந்தடைந்தார் ஷேக் ஹசீனா

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தப்பிய அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, டெல்லி வந்தடைந்தார். டாக்காவில் இருந்து AJAX1431 என்ற எண் கொண்ட சி-130 ரக விமானத்தில் புறப்பட்ட அவர், டெல்லி அருகே உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கினார். வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான, இடஒதுக்கீட்டு போராட்டம் தீவிரம் அடைந்ததை அடுத்து, ஷேக் ஹசீனா அங்கிருந்து இருந்து வெளியேறியுள்ளார்.
Similar News
News January 24, 2026
திமுகவில் ஸ்டாலினுக்கு வந்த புதிய சிக்கல்

தேர்தல் நெருங்குவதால் அமைச்சர்கள் பலரும் தங்கள் ஏரியாவில் பிரபலமானவர்களை திமுகவில் இணைத்து ஸ்டாலினின் குட் புக்கில் இடம்பெற்று வருகின்றனர். இது திமுகவுக்கு சாதகம் என்றாலும், ஒருபுறம் பாதகமாக மாறியுள்ளது. தென்காசி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கு, வரும் தேர்தலில் சீட்டு கொடுக்க தலைமை திட்டமிட்டுள்ளதால் பழைய நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனராம்.
News January 24, 2026
டி20 WC-ல் வங்கதேசம் OUT, ஸ்காட்லாந்து IN

பாதுகாப்பு காரணங்களால் வங்கதேசம் பங்கேற்கும் போட்டிகளை, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற BCB கோரிக்கை வைத்தது. இதை ஏற்காத ICC அவர்களை டி20 WC-ல் இருந்து நீக்கியது. தற்போது வங்கதேசம் இடம்பெற்ற C பிரிவில் அவர்களுக்கு பதில், ஸ்காட்லாந்து இடம்பெற்றுள்ளது. C பிரிவில் இப்போது நேபாள், வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, இத்தாலி ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
News January 24, 2026
புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

குடியரசு தினத்தையொட்டி தற்போது பள்ளி மாணவர்கள் தொடர் விடுமுறையில் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் ஆகிய தாலுகாவை சேர்ந்த மாணவர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, ஜன.28-ல் 3 தாலுகாவிலும் உள்ளூர் விடுமுறையாகும். இதனை ஈடுசெய்ய, பிப்.7-ம் தேதி பணிநாள் என கலெக்டர் அறிவித்துள்ளார்.


