News April 16, 2024

ஷங்கர் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

image

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், நடிகர் சிவகார்த்திகேயன், மோகன்லால், ரன்வீர் சிங், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற திருமண விழாவில், ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால், அர்ஜுன், பாரதிராஜா, மணிரத்னம், விக்னேஷ் சிவன், நயன்தாரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News November 10, 2025

இந்தியாவின் ‘பழம்பெரும்’ Brand-கள் பற்றி தெரியுமா?

image

பிஸ்கட், சோப்பு, கார் என பல தலைமுறையாக இந்தியாவில் இருக்கும் சில உள்நாட்டு Brand-கள் வெறும் பெயர்கள் அல்ல. அவை பாரம்பரியம், பெருமை. உள்ளூர் வேர்கள் உலகளாவில் தடம் பதிக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டுகள். அப்படி நமது அன்றாட வாழ்க்கையை வடிவமைத்த, சுதந்திரத்துக்கு முன்பே தொடங்கப்பட்ட சில Brand-கள் பற்றி அறிய மேலே SWIPE பண்ணுங்க.

News November 10, 2025

பலதார மணத்துக்கு தடை: அசாம் அமைச்சரவை ஒப்புதல்

image

அசாமில் பலதார மணத்தை தடை செய்யும் வகையிலான வரலாற்று சிறப்புமிக்க மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டம் வரும் நவ.25-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என அசாம் CM ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படும். பழங்குடியினருக்கு இந்த சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

News November 10, 2025

பயனாளர்களுக்கு ஷாக் கொடுத்த யூடியூப் நிறுவனம்!

image

யூடியூப் Ad-களை தவிர்க்க, பலரும் Ad blocker பயன்படுத்துகின்றனர். அப்படியான யூஸர்களுக்கு யூடியூப் நிறுவனம் ஷாக் கொடுத்துள்ளது. Ad blocker யூஸ் பண்ணுவோர் இனி யூடியூப்பில் வீடியோவே பார்க்க முடியாது. தனது புதிய அப்டேட்டில் Ad blocker இருப்பதை கண்டறியும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ள யூடியூப், அவர்களுக்கு சேவை வழங்குவதையும் நிறுத்துகிறது. Ad blocker-ஐ எடுத்தால் மட்டுமே, வீடியோ பார்க்க முடியும்.

error: Content is protected !!